India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், பொதுப்பெயர் உள்ள மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை, குறைந்த விலையில் விற்பனை செய்ய, தமிழகத்தில், 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் இருந்து, 61 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் கூட்டுறவு சங்கங்களுக்கு, 22 மருந்தகங்களும், தனி நபர்களுக்கு, 20 மருந்தகங்களும் மொத்தம், 42 மருந்தகங்களுக்கு, மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கோவையில் கோல்டு வின்ஸ் முதல் லீ மெரிடியன் ஹோட்டல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இன்று (பிப்.13) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த டபுள் டக்கர் மேம்பாலத்தில் மேல் தளத்தில் மெட்ரோ ரயில் கீழ் தளத்தில் வாகன போக்குவரத்து செல்லும்படி அமைக்கப்படும் என்றார்.
கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் ரூ.30,000 வரை. நேர்காணல் 24.02.25 ஆகும். டிப்ளமோ, சிவில் இன்ஜினியர் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு <
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் க.கிரியப்பனவர் பொறுப்பேற்று உள்ளார். 2016ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வான இவர் முதல்முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அதன் பிறகு பல்பேறு பொறுப்பகளில் இருந்த அவர் இன்று கோவை கலெக்டராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின் பேசுகையில், அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து உள்ளதா என திமுக எம்பி வில்சன் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு சாத்திய கூறுகள் இல்லை என தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு கோவை லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் ரோட்டரி சங்கம் வரும் (09.03.2025) அன்று பீளமேடு பகுதியில் உள்ள பன் ரிபப்ளிக் மாலில் காலை 5.30 மணியளவில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் போன்ற பிரிவுகளிலும், 1, 3, 5, 10 போன்ற கிலோமீட்டர் வரையிலான மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு 95852 78044, 99528 94095 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கோவை செல்வபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குண்டுகளுடன் சென்ற நாசர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு <
Sorry, no posts matched your criteria.