Coimbatore

News February 16, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

கோவைக்கான மாஸ்டர் பிளான்: முதலமைச்சர் தகவல்

image

கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான மாஸ்டா் பிளான் (முழுமை திட்டம்) கடைசியாக 1994-ல் தான் புதுப்பிக்கப்பட்டது. அதற்கடுத்து கோவை மாநகரம் பலகட்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் மதுரைக்கான மாஸ்டர் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

கோவைக்கான மாஸ்டர் பிளான்: முதலமைச்சர் தகவல்

image

கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான மாஸ்டா் பிளான் (முழுமை திட்டம்) கடைசியாக 1994-ல் தான் புதுப்பிக்கப்பட்டது. அதற்கடுத்து கோவை மாநகரம் பலகட்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் மதுரைக்கான மாஸ்டர் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

வெள்ளியங்கிரியில் குவியும் பக்தர்கள்

image

வெள்ளியங்கிரிக்கு பிப்.26 அன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெள்ளியங்கிரிக்கு செல்ல கடந்த 1 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கிய நிலையில், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News February 15, 2025

வேண்டிய வரம் அருளும் கோவை கோனியம்மன்!

image

கோயம்புத்தூரில் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது கோனியம்மன் கோயில். இந்த கோயில் வரலாறு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது. இருளர் இன மக்களால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. திருமணம் நடத்தி வைத்தல், தடைகளை நீக்குதல், பிள்ளைப்பேறு நல்குதல், செல்வமும் செழிப்பும் தருதல், வளமும் நலமும் வாரி வழங்கல் என பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருபவளாகவே அன்னை அருள்பாலிக்கிறாள்.

News February 15, 2025

“நம்ம ஊர், நம்ம கோவில்”

image

கோவை மாவட்டத்தின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் முக்கியமான கோவில் ஆகும். ஒருமுறை இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டதால், கோவன் என்பவர் ஒரு கல்லை நட்டு வைத்து வனங்கி வந்ததாவும், பின் பஞ்சம் நீங்கி செழிப்படைந்ததால் அங்கு கோவில் கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது. கோவையில் உள்ள பலருக்கு கோனியம்மன் குலதெய்வம் ஆகும். கோவை மக்களே Share பண்ணுங்க.

News February 15, 2025

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவையில் நடப்பு மாதத்துக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரடியாக நடக்கிறது. 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்களது சுய விபரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

வெள்ளியங்கிரி செல்வோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

கோவை, ஆலாந்துறை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்களை பரிசோதனை செய்ய 2 டாக்டர்கள் கொண்ட குழு உள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி சிவராத்திரி தினம் என்பதால் அன்று மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். பக்தர்கள் நலனுக்காக 3வது மலை மற்றும் 6 வது மலையில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

News February 15, 2025

விஜய்க்கு பாதுகாப்பு ஏன்? அண்ணாமலை விளக்கம்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து இன்று (பிப்–14) கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்து பேசிய அவ,ர் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் பாரபட்சம் இன்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும் என தெரிவித்தார்.

News February 15, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (14.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!