Coimbatore

News February 17, 2025

வாக்காளர் பட்டியலில்: 33,000 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் செய்யவும் கடந்த 3 மாதங்களாக பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்படி கோவை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்க 9,328 பேரும், நீக்கம் செய்ய 6,306 பேரும், பிழைகள் திருத்தம் செய்ய 18,244 பேர் என மொத்தம் 33,878 பேர் விண்ணப்பித்தனர் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

News February 17, 2025

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

பொள்ளாச்சி: கோட்டாம் பட்டியில் உள்ள கே.கே.ஜி. மஹாலில் வரும் சனிக்கிழமை (22.02.2024) காலை 8 மணிக்கு பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடங்க உள்ளது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார். பொள்ளாச்சி நகராட்சி மற்றும் திமுக பொறியாளர் அணி இந்த முகாமை நடத்த உள்ளது.

News February 17, 2025

மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

image

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவை மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்க பிப்.17ஆக இருந்த கால அவகாசம் தற்போது பிப்.21ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக உரிய ஆவணங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பிப்.21ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2025

411 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <>இந்த லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

நாளை இப்பகுதியில் மின்தடை

image

கோவையில் நாளை(பிப்.18) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, மருதுர், பெரியநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், குப்பேபாளையம் ஆகிய பகுதிகளான கோவனூர, கூடலூர் கவுண்டம்பாளையம், சமநாயக்கன்பாளையம், ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பேரூர், கவுண்டனூர், கள்ளிபாளையம், செங்காளிபாளையம், மருதூர், தேக்கம்பட்டி, காரமடை ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News February 16, 2025

கோவை மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று கூறியதாவது. கோவை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா, உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

News February 16, 2025

கோவை: இனி ஓடவும், ஒளியவும் முடியாது

image

குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசருக்கு மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக உள்ளது. இதனால் கோவை சரகத்தில் முக்கிய சந்திப்புகள், பண்ணை வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை சரகத்தில் மொத்தமாக 43,948 கேமராக்களும், பண்ணை வீடுகளில் 5,415 கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News February 16, 2025

கோவையில் வேலை வாய்ப்பு

image

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் ரூ.30,000. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 24.2.15 ஆகும். இதற்கு <>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து <<>>விண்ணபத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

News February 16, 2025

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

image

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சென்னை உள்ளிட்ட சில மையங்களில் வரும் ஜூன்.1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கார்ஹிகான்ட், டேராடுன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 16, 2025

சிறுவர்கள் மீது பாய்ந்த போக்சோ

image

பொள்ளாச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மாணவியர் இருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய 4 சிறுவர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளனர். பின், தகறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறார் சீர்திருத்து பள்ளியில் சேர்த்தனர்.

error: Content is protected !!