India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாள் பாலியல் வன்கொடுமை, கொலை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கோவையில் 2 நாளுக்கு முன் சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று பள்ளி ஓவிய ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். இது போன்ற கொடுமைகளுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா?
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் இன்று (பிப்.20) கோவையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். அதன்படி காலை 9 மணிக்கு காந்திபுரத்தில் புனரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு, 9:30 மணியளவில் 8 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
கோவையில் டிரோனில் 5டி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கட்டடங்கள் படம் பிடிக்கப்பட உள்ளன. புவி அமைவிட விவரங்களுடன் புல வரைபடங்களை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகளால் கையாளப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கட்டடம், இடம், எல்லை பரப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவாகிவிடும். இதனடிப்படையில் நிலம், கட்டட உரிமையாளர்களுக்கு சொத்து வரிகார்டு வழங்கப்படும்.
கோவை காந்திபுரத்தில் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே இருந்த பழைய ஆம்னி பேருந்து நிலையம் ரூ.2.95 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆம்னி பேருந்து நிலையம் நாளை (பிப்.20) நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு மற்றும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளனர்.
கோவை, கோவனூரில் உள்ள பாலமலை என்ற, இயற்கை எழில் கொஞ்சும் மலையில் அரங்கநாதர் வீற்றிருக்கிறார். இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக அமர்ந்துள்ள அரங்கநாதர், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வல்லமை கொண்டவர். பாலமலை ரங்கநாதரை வழிபட்டால், மாங்கல்ய வரம், குழந்தை வரம் கிடைக்குமாம். இயற்கையான சூழலில் குடிகொண்டிருக்கும் அரங்கநாதரை ஒருமுறை சென்று தரிசியுங்கள். புத்துணர்வும், மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும்.
கோவை மாநகரில் அமைந்துள்ள மத்திய அரசு நடத்தும் பள்ளியில் மாணவிகளிடம் ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு ஆகியவை எடுக்கும் பொழுது மாணவிகளை தவறாக தொடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகார் படி, ஆசிரியர் ராஜன் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி ஆகிய பதவிகள் 28.2.2025 (ம) 4.3.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகின்றன. இந்த ஊர்க்காவல் படை பிரதேச தளபதி (ம) துணை பிரதேச தளபதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோவை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு 21.2.2025 தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்றார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி, கிருஷ்ணா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்த அங்கு மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலுள்ள 1200 கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் ஏப்.4 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால், பிப்.20 முதல் ஏப்.6 வரை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பிப்.20 முதல் ஏப்.6 வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை, அரசு விடுமுறை நாட்கள் டூவீலர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியாகவும், கோவில் பேருந்துகள் மூலமும் வரலாம் என நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து சிறுமியை அறைக்கு வரவழைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.