India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை இன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஈஷாவில் திட, திரவ அல்லது ஒலி மாசுபாட்டைக் கையாள போதுமான வசதிகள் உள்ளன என்று தெரிவித்ததை அடுத்து ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாயன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நாளை (பிப்.25) மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் மாநகராட்சி நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கோவையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
இரு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (பிப்.25) கோவைக்கு வருகிறாா். டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் அவிநாசி சாலையில் உள்ள விடுதியில் தங்குகிறாா். தொடா்ந்து கோவை பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை பிப்.26 திறந்து வைப்பதோடு, தமிழகத்தின் உள்ள மேலும் 5 புதிய பாஜக அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உள்ளிட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், இரண்டாம் தளம், பழைய கட்டடம், கலெக்டர் அலுவலகம், கோவை – 641 018 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலைக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வகையில் இந்தாண்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வர தொடங்கியுள்ளனர். இதனிடையே வெள்ளியங்கிரி மலையில் கேரள எல்லையில் சிறிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் எடுத்து வர கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (23.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் இன்று புவியியல், சுரங்கத்துறை சிறப்பு உதவி ஆணையர் கணேசன் தலைமையிலான கனிமவளத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஈஷா யோக மையத்தில், சத்குருவின் தலைமையில் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (24.02.2025) காலை 11 மணிக்கு காளப்பட்டி, டாக்டர் N.G.P கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்” “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் மாநில பெண்குழந்தைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.