Coimbatore

News February 26, 2025

2026ல் தமிழத்தில் இருந்து துவக்கம்: அமித்ஷா

image

கோவை, பீளமேடு பகுதியில் இன்று பாஜக-வின் புது அலுவலகத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்புரை ஆற்றினார். அதில் 2025ன் துவக்கம் டில்லி வெற்றியுடன், 2026ன் துவக்கம் தமிழகத்தில் NDA கூட்டணி, பாஜக ஆட்சியுடன் துவங்கும் என்றார். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை, தேச விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

News February 26, 2025

ஜனவரி மாதத்தில் 2.92 லட்சம் பேர் பயணம்

image

கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து ஜன. மட்டும் 2040 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி சர்வதேச விமானங்களில் 29,463, உள்நாட்டு விமானங்களில் 2,63,192 பயணிகள் என மொத்தமாக 2,92,655 பேர் பயணம் செய்துள்ளனர்.

News February 26, 2025

கோவை வந்த முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி

image

சேலத்தில் நடைபெற்ற பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின்னர், கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது, நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News February 26, 2025

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி போலீசார்

image

கோவை மாவட்டத்தில் இன்று (25.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரில் டி.எஸ்.பி. ஶ்ரீநிதி, மற்றும் பி.என்.பாளையம், கிணத்துக்கடவு, காருண்யா, சூலூர், செட்டிபாளையம், பொள்ளாச்சி தாலுகா, நெகமம், கோட்டூர், மேட்டுப்பாளையம் போலீசாரின் பெயரும் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News February 25, 2025

கோவையில் போலீஸ் குவிப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை கோவை மாநகர பகுதி முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், அவிநாசி சாலை பீளமேடு, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காக அவிநாசி சாலை, தொண்டாமுத்தூர் (ம) பூண்டி பிரதான சாலைகளில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News February 25, 2025

கோவையில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவையில் 20 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 25, 2025

கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று சேலத்தில் இருந்து காரில், சாலை மார்கமாக கோவைக்கு வருகிறார். கோவை விமானநிலையம் மூலமாக இரவு 7:40 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்படுகிறார். 

News February 25, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சிகள்

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை இன்று இரவு 8.50 மணியளவில் மத்திய பிரதேசத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு படை விமானம் கோவை விமானம் நிலையம் வருகிறார். இரவு நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை காலை கோவை மாவட்ட பாஜக (ம) பிற மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து நாளை மாலை ஈஷா யோகாவில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

News February 25, 2025

BREAKING: அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை

image

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று அதிகாலை முதல் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின், தீவிர ஆதரவாளரான இவர் வீட்டில் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News February 25, 2025

கோவை: இரவு ரோந்து போலீசாரின் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (24.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!