India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய எங்கள் நாட்டில் தொழில் தொடங்குங்கள் என்று கோவை தொழில் முனைவோருக்கு மொரிசியஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய மொரிசியஸ் தூதர் முனீஸ்வர் இந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நாடுகளுக்கு தங்கள் நாட்டில் தொழில் தொடங்கினால் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என்றனர்.
கோவை மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி இணைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியோடு மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய நான்கு பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, அசோகபுரம்,சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது 257.04 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது.
கோவை தடாகம் அருகே முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளிக்கும் தலம் அனுவாவி முருகன் கோவில். “அனு” என்பது அனுமனை குறிக்க, “வாவி” என்பது நீராதாரத்தை குறிக்கிறது. அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் போது தாகம் ஏற்பட்டதால் முருகன் தன் வேலால் இங்கு ஒரு நீரூற்றை உருவாக்கினார். இந்த நீரூற்று எந்த காலத்திலும் வறண்டு போகாது என்று கூறப்படுகிறது. இங்கு செல்ல 423 படிகள் ஏறி செல்ல வேண்டும்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம் இன்று (மார்ச் 1, 2) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது காலை, மாலை நேரத்தில் பனிப்பொழிவும், இரவில் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், சளி, இருமலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீரை நன்றாக காய்ச்சி பருக வேண்டும். குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது என வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மகன் திருமணம் வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவைக்கு வந்த அமித்ஷாவை திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் எஸ்.பி வேலுமணி. அமித்ஷாவும் அவசியம் வருகிறேன் என்று உறுதி கொடுத்துள்ளதாகவும், அந்த சந்திப்பின் போது அரசியலும் பேசப்பட்டதாக இன்று தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சூலூர் விமானப் படை பள்ளியில் காலி யாக உள்ள ஆசிரியர், அலுவலகப் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மார்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம், ஆங்கிலம், ஹிந்தி, விளையாட்டு, நூலக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். <
கோவை மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு மார்.3 முதல் மார்ச்.25 வரை நடைபெற உள்ளது. +1 தேர்வு மார்.5 முதல் 27 வரை நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் +2 தேர்வை 363 பள்ளிகளை சேர்ந்த 35,999 பேர், +1 தேர்வை 366 பள்ளிகளை சேர்ந்த 36,664 பேர் எழுத உள்ளனர். மேலும், 12ஆம் வகுப்பில் 624 பேர், 11ஆம் வகுப்பில் 407 தனி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்திருந்ததால் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு ஆயுதப்படை போலீஸ் பார்த்திபன், மாமியாருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் விடுப்பு கேட்டுள்ளார். விடுப்பு தராததால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் கத்தியால் அறுத்து கொண்டார். அவர் கோவை ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய அஞ்சல் துறையில் ரூபாய் 599 காப்பீடு செலுத்தி ரூபாய் 10 லட்சமும், ரூபாய் 799 காப்பீடு தொகைக்கு ரூ.15 லட்சமும் விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நாளை (பிப்.28) கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.