India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நில அளவை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் தங்களது பகுதியில் உள்ள e-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டும், செருப்பு போட மாட்டேன் என்றும் புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்போது சொல்கிறேன். இது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். எனவே வாழ்நாள் முழுக்க செருப்பே போட முடியாது என்றார்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரிய கடை வீதி இன்ஸ்பெக்டர் ராஜகுமார் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும் என பல்வேறு ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று கூறுகையில், பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அதன் கிளை நிறுவனங்கள் அனைத்திலும் தனித்தனியான உள்புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். அப்படி அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில் தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய கட்டணத்தையும் ஆன்லைனிலும் செலுத்தி விண்ணப்பிக்க இயலும். அதற்கான குறுஞ்செய்தி மனுதாரருக்கு செல்போனுக்கு அனுப்பப்படும். பின், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடத்தை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.
திருப்பூரை சேர்ந்த இளம்பெண் கார்த்திகா கோவை விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே.6ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இப்புகாரை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட் நேற்று தனியார் உணவகத்திற்கு மன உளைச்சல், வழக்கு செலவு என மொத்தமாக ரூ.10,000 அபராதம் விதித்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், ஓய்வுக்கால முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான தனியார் விடுதிகள், தொழிற்சாலைகளில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் ஆகியவற்றை (www.tnswp.com) என்ற இணையதளம் மூலமாகவும் வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (01.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.