India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் ஏப்ரல்.17ஆம் காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன்.04 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், மார்ச் மாதத்தின் பல நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல் மதுரையிலும், வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இன்று கோவையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், நாளை 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்.10) கோவை ஆத்துப்பாலம் பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களிடம், பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவிற்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலா மணியை ஆதரித்து நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் வட மாநிலத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதே நிலையில் நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும். சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது என பேசினார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர்,கரியாம்பாளையம், காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். நீலகிரியில் இருந்து வரும் வாகனங்கள் ஓடந்துறை ராமசாமி நகர், சிறுமுகை சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பல வாக்குறுதிகளை திமுக கோவைக்கு வழங்கி வந்துள்ளது. அதில், கோவையில் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து திமுக ஒரு புது தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறது. அதன்படி, கோவை மெட்ரோ ரயில் சேவை விரைவில் செயல்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் திருப்பூர் வரை நீடிக்க வழி வேலை செய்யப்படும் என இன்று (ஏப்ரல்.09) கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நாளை (மார்ச்.10) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்படும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக நிர்வாகி இன்பதுரை இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜா, உதயநிதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் என்று கூறியுள்ளார்.
கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி (48). நகைப்பட்டறை உரிமையாளரான இவர் கோவை ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த சிவக்குமார், கனகலட்சுமி தம்பதியிடம் 2022 ஆம் ஆண்டு நகை செய்து தர 1 கிலோ தங்கம் தந்தார். அவர்கள் 350g தந்து விட்டு மீதம் 650g தங்கத்தை தராமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாயாண்டி கடைவீதி போலீசில் அளித்த புகாரின் பேரில் தம்பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.