India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொள்ளாச்சி தொண்டாமுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளி ஸ்ரீதர் – மனைவி ரம்யா கிருஷ்ணன் தம்பதிக்கு, கடந்த 17 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தை, தாயை அவரது தாயார் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு, ஸ்ரீதர் தனது காரில் மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கரப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் கார் மோதியதில் ஸ்ரீதர் பலியானார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு, சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பவர், குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார், தமிழ்செல்வனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (21.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலைகளை ஏறிச்சென்று, சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது மலை ஏறும் பக்தர்களுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) மேட்டுப்பாளையம் சாலை, அரசு ஐ.டி.ஐ. கல்லூரி அருகே, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 500க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
வடவள்ளி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பறவல்லி, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கா.மண்டபத்தின் ஒரு பகுதி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, வாட்ஸ் அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியங்கள் காக்கப்படும் என, கோவை எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.