India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று (ஏப்ரல்.13) வந்த நூர் முகமது, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும் இது நாள் வரை காவல்துறையினர் பாதுக்காப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து புகார் அளித்தார்.
ஊட்டி சாலையில் நேற்று மாலை சேலத்தை சேர்ந்த இருவர் டூவீலரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றனர். அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று அவை தலைவர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன் குமார் சிறப்புரையாற்றினார். இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்.16 ஆம் தேதி கோவைக்கு பிரச்சாரம் செய்ய வரவுள்ள வைகோவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எர்ணாகுளத்தில் இருந்து ஏப்.19 முதல் மே.31 வரை புது டெல்லிக்கு கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், ஆக்ரா, மதுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே , மோடி எல்லாம் செய்கிறார் என்றார்
கோவை ஆவாரம்பாளையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல்.12) புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர், மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்து வரும் ஏப்.14 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோட் ஷோ நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (13.4.2024) கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார். அதன்படி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து 10,000 பெண்களுடன் நிர்மலா சீதாராமன், மக்கள் தரிசன யாத்திரை மேற்கொள்கிறார் என இன்று (ஏப்ரல்.11) தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம் மார்க்கர்ஸ் குளோபல் பி லிட் என்ற நிதி நிறுவனம் மக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக திருப்பி தருவதாக கூறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் நேற்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போன்று இன்று (ஏப்.,11) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். எனவே, முன்பதிவு செய்யும் பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.