Coimbatore

News April 16, 2024

மூட்டை தூக்கி வாக்கு சேகரிப்பு

image

நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று (ஏப்.15) மாலை மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது, மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிக்கு சென்ற அவர் லாரிகளில் இருந்து கிழங்கு மூட்டைகளை தூக்கிச்சென்று அங்கு இருக்கும் பெண்கள், ஆண்கள், தொழிலாளர்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

News April 15, 2024

அதிமுகவில் இணைந்தது தவறான முடிவு

image

பாஜகவில் கோவை மண்டலத்தில் முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்த செல்வபிரபு அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருந்தவர். இவர் அண்மையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் அதிமுகவில் இணைந்ததன் மூலம் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேன். அது தவறான முடிவு என்று வேதனை பொங்க செல்வ பிரபு வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

கோவையில் வரும் 19ம் தேதி மழைக்கு வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த 2 தினங்களாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News April 15, 2024

கோவை திமுக பிரபலம் மீனா லோகோ வீட்டில் சோதனை!

image

கோவை மாநகராட்சியின் 46 ஆவது வார்டு கவுன்சிலரும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகோ வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 3 கார்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகுவின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1.5 மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம், பொருள், ஆவணம் என ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

News April 15, 2024

கோவை: ஒரு டன் இளநீரின் பண்ணை விலை உயர்வு

image

ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளது என்பதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News April 14, 2024

செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

image

பெரியநாயக்கன்பாளையத்தில் (ஏப்ரல். 14) இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பிரச்சாரம் செய்தார். இதில், திரைப்பட நடிகர் சரத்குமார், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

கோவை: மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

image

ஈரோட்டை சேர்ந்தவர் கனகராஜ்(51). 2010ஆம் ஆண்டு அப்பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து கனகராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல்.14) அதிகாலை அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 14, 2024

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சு திணறி பலி

image

கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், வெளியூர் மக்களும் விரும்பும் ஓர் இடம் வெள்ளியங்கிரி மலை. இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவை போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் என்ற பக்தர் இன்று முதல் மலை ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 7 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

News April 14, 2024

தொழிலாளி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

image

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தினசாமி கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.27 ஆம் தேதி டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோரால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை 3 வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கு விசாரணை முழுமையாக முடிவுற்று நேற்று நீதிபதி பத்மா டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News April 14, 2024

கோவை வழியாக சிறப்பு ரயில்

image

செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு ஏப்.17 முதல் ஜூன்.26 வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காயங்குளம், மாவேலிக்கரை, திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!