Coimbatore

News April 25, 2024

கோவை: “மை”யுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்

image

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு People of Annamalai என்ற இயக்கம் மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது கண்டித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் 100க்கும் மேற்பட்டோர் இன்று (ஏப்.25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் விரலில் ஓட்டுப்போட்ட மை இருந்ததால் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

News April 25, 2024

பொள்ளாச்சி: வறட்சி காரணமாக யானைகள் இடமாற்றம்

image

பொள்ளாச்சி டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், கோழிக்கமுத்தி முகாம் அருகே பாகங்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெறுவதால் முகாமில் உள்ள 20 யானைகளை வரகளையாறு, மானாம்பள்ளி மற்றும் சின்னாறு வனப்பகுதிகளுக்கு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

சிகிச்சை பெற்று வந்த ஐடி ஊழியர் உயிரிழப்பு

image

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி அருகே டூவீலர் மீது காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்டார். இந்நிலையில் அதே சம்பவத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் என்ற இளைஞரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இவ்வழக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

கோவை: வியாபாரிகளை தாக்கி நகைகள் கொள்ளை

image

பேரூர் செல்வ சிந்தாமணி புதூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரிகளான ராஜேந்திரன், சாந்தகுமார் கடந்த 22 ஆம் தேதி டூவீலரில் காந்திபுரம் சென்றுள்ளனர். அப்போது, குளக்கரையில் காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் டூவீலர் மீது மோதி விட்டு கத்தி, கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் நேற்று வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 25, 2024

மாகாளியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா

image

ஊஞ்சபாளையத்தில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப்ரல். 24) நடைபெற்றது. சோமனூர் அருகே ஊஞ்சபாளையத்தில் கிராமத்தில்
உள்ள மாகாளியம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதில் ஊஞ்சபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 25, 2024

ஆற்று படுகையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

image

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பெருமாள் கோவில் பதி பகுதியில் உள்ள ஆற்று படுகையில் இன்று (ஏப்.24) குளிக்க சென்ற பிரவீன் (17). கவின் (16), தர்ஷன் (17) ஆகிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 3 பேர் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

உணவு வீதி அமைக்கும் பணிகள் தீவிரம்

image

தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், இந்தியாவின், 100 இடங்களில், ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு வழங்கும் ‘உணவு வீதிகள்’ திட்டத்தை மத்திய அரசு, உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைய குழு மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உணவு வீதி அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஜூன் 4க்கு பிறகு, கோவை மக்கள் இங்கு சுவையான உணவு வகைகளை அருந்தலாம் என்று தகவல் இன்று வெளியாகி உள்ளது.

News April 25, 2024

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நிலைபாடு

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும்” என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

போக்சோ வழக்கில் மில் தொழிலாளி கைது

image

சூலூர் அடுத்துள்ள கலங்கல் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருபவர் செல்வராஜ். இவர் அவரது மில்லின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் நேற்று செல்வராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

News April 25, 2024

மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

image

கோவை மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

error: Content is protected !!