Coimbatore

News March 24, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் இன்று (மார்ச்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

News March 24, 2024

அதிமுக வேட்பாளர் நாளை மனுதாக்கல்

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசாவும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாளை (மார்ச். 25) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

News March 24, 2024

ரயில் நான்கு நாட்களுக்கு ரத்து

image

நாகர்கோவில் – கோவை ரயில் சேவை இன்று (மார்ச். 24) முதல் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 24, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கோவையில் கலாமணி ஜெகநாதனும், பொள்ளாச்சியில் மருத்துவர் சுரேஷ்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

பறக்கும் படையினருடன் அதிகாரிகள் ஆலோசனை

image

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

News March 23, 2024

கோவையின் வெப்பநிலை நிலவரம் அறிவிப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி கோவையில், 23-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 24 டிகிரியில் இருந்து அதிகபட்சம் 37 வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் வெப்பம் பதிவாவதில் சென்னையை மிஞ்சியுள்ளது கோவை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2024

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

image

பொள்ளாட்சி மக்களவை தொகுதி வேட்பாளராக கே. ஈஸ்வரசாமி அவர்களை திமுக அறிவித்தது. இந்தநிலையில், பொள்ளாட்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அர.சங்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கழல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 23, 2024

கோவை: என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

image

கோவையில் 2022 நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன. 

News March 23, 2024

அண்ணாமலை 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

image

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

News March 23, 2024

கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பௌர்ணமி (24.03.2024), பங்குனி உத்திரம் (25.03.2024), பண்ணாரி குண்டம் (25.03.2024) மற்றும் வார இறுதி நாட்களான (23.03.2024-24.03.2024) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி செல்ல 30, திருவண்ணாமலை செல்ல 25, பண்ணாரி கோவிலுக்கு மற்றும் வெளியூர்களுக்கு செல்ல 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், இன்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!