Coimbatore

News March 7, 2025

மாவட்டமாகிறதாக பொள்ளாச்சி?

image

தலைமை செயலகத்தில் கொங்குநாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி தனி மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறினார். நீண்ட நாள்களாக கோரிக்கையாக இருக்கும் பொள்ளாச்சி, தனிமாவட்டம் ஆகுமா? கோவை மக்களே உங்க கருத்து என்ன? (Share it)

News March 7, 2025

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

image

மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், சேகர். அண்ணன் தம்பியான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்று மதுபோதையில் சரவணன் சேகரை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர் இன்று சரவணனை கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரவணன் கோவை ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சேகரை கைது செய்தனர்.

News March 6, 2025

செட் டாப் பாக்ஸ் வாங்க வங்கி கடன்

image

கோவை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி எண்ணிக்கையை அதிகரிக்க ஆபரேட்டர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஹெச்டி டிஜிட்டல் ‘செட்ஆப் பாக்ஸ்’ இலவசமாக கொடுக்க வேண்டும் என ஆபரேட்டர்கள் கேட்டு வருகின்றனர். இலவசமாக கொடுக்க முடியாது. 500 பணம் செலுத்திதான் பெற வேண்டும். ஆபரேட்டர்களின் நிதி பிரச்னையை கருத்தில் கொண்டு, ஹெச்.டி. டிஜிட்டல் செட்ஆப் பாக்ஸ் வாங்க வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.

News March 6, 2025

திமுக அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது மேலும் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.

News March 6, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

பொள்ளாச்சி தனி மாவட்டம்?

image

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 50 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டும் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தலைமையாக கொண்டு மடத்துக்குளம், உடுமலை தாலுகாக்களை இணைத்து தனி மாவட்டம் உருவாகும் என கூறப்பட்டு வருவதால் பொள்ளாச்சி மாவட்டமாவது கேள்விக்குறியாகியுள்ளது.

News March 6, 2025

திருவள்ளுவர், கம்பர், பாரதி வேடமணிந்து போராட்டம் 

image

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய அரசு தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன முறையில் திருவள்ளுவர், கம்பர், பாரதி ஆகியோரின் வேடமனிந்து நூதன முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News March 6, 2025

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புகள்

image

அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.

News March 6, 2025

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 567 பேர் ஆப்சென்ட்

image

தமிழகத்தில் நேற்று முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின. இத்தேர்வு வரும் மார்ச்.27ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 127 தேர்வு மையங்களில் 36,543 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 18,575 மாணவர்கள், 17,401 மாணவிகள் என மொத்தமாக 35,976 பேர் தேர்வினை எழுதினர். 567 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News March 6, 2025

கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!