India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில், சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவருக்கு அளித்த பேட்டியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தி பேட்டி கொடுத்து பேசியதாக
வழக்கறிஞர் முத்து இன்று பந்தயசாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கோவை பந்தய சாலை காவல் துறையினர் சவுக்கு சங்கர், மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை சித்தாபுதூரில் பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவர் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற மெமு ரயில் வருவதை கவனிக்காமல் என்ஜிஜிஓ காலனி லட்சுமி நகர் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் அழகிய நீர்வீழ்ச்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திட வனத்துறை அனுமதிக்க வேண்டும். இது கோவை மக்களின் குற்றாலமாக இருக்கிறது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி துறை சார்ந்த மூன்றடுக்கு குழுக்கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக சென்று மாணவர்களை சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி அதிகபட்ச வெப்பநிலை 34 – 38 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமும், மாலை நேரம் 40 சதவீதமாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 – 8 கி.மீ.,வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது
கோவையில் காற்றுடன் கூடியமழை பெய்துவருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேமராக்களுக்கு யுபிஎஸ் மின்சாரத்தை சீராக வழங்கக்கூடிய கருவிகள் இன்று பொருத்தபட்டது . இதனால் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத்துறை புள்ளி விபரங்களின்படி கோவையில் இ-வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது. நாளொன்றுக்கு, 25க்கும் அதிகமாக இ-வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கேற்ப இ-வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும் 34 ஆக அதிகரித்து வருகிறது. திருச்சி, அவிநாசி, பாலக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் புதிதாக சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இங்கு சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று (மே.14) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி என பலரும் கலந்து கொண்டனர்
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை புதிதாக பெற மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.