Coimbatore

News May 17, 2024

முன்னாள் மேயர் மறைவு – ஓபிஎஸ் இரங்கல்.

image

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் தா. மலரவன் இன்று காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கலை தெரிவித்துள்ளார். அம்மாவின் அன்பை பெற்றவருமான மலரவன் காலமானார் என்ற‌ செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மலரவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

News May 17, 2024

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் உயிரிழந்தார்

image

கோவை முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.மலரவன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். டி.மலரவன் 2001முதல் 2006 வரை மேயராகவும், 2006-2011 வரை கோவை மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

பொருள்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

image

பொது விநியோக திட்டம் தொடா்பாக துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளா் ஹா்சஹாய் மீனா தலைமை வகித்தாா். அப்போது, பேசிய அவர் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News May 17, 2024

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் சான்று

image

கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் சரண்யாதேவி நேற்று கூறுகையில், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1343 கல்வி நிறுவனங்களுக்கு புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள்
என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.

News May 17, 2024

தேசிய அடையாள அடையாள அட்டை : கலெக்டர் அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே வைத்திருக்கும் அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டை கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் ஒருவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வர வேண்டும் என கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்துள்ளார்.

News May 17, 2024

கோவை மழைப்பொழிவு விவரம்

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வால்பாறை PTO பகுதியில் 6 செ.மீட்டரும், சின்கோனா பகுதியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பாதிவாகியிருந்தது.

News May 17, 2024

கோவை: நாளை உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு ‘கல்லூரிக் கனவு’ இரண்டாம் கட்ட நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்லூரிப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

News May 17, 2024

திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்,
கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

News May 17, 2024

ஜிபிஎஸ் வசதியுடன் நீல நிற டவுன் பஸ் இயக்கம்.

image

அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் 602 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு நிறத்திலான சொகுசு பஸ்கள் 180. மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான பஸ்களை அடையாளம் காண வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் ஜிபிஎஸ் வசதியுடன் நேற்று முதல் முதற்கட்டமாக இயக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் அழகாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

News May 16, 2024

கோவை: சாயக் கழிவுகளால் நீரில் நுறைகள்!

image

கோவை குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள சாய பட்டரைகளில் இருந்து சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் அதிக நுறையுடன் காணப்படுகிறது.

error: Content is protected !!