India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள தடை இல்லை’ என தெரிவித்தனர். வழக்கு விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று எடுத்த செய்தி குறிப்பில், பொது விநியோக திட்ட சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக மாதந்தோறும் 2வது சனிக்கிழமை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாளை சிறப்பு வட்ட வழங்கல் அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அக்.16, 17 ஆகிய தேதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்.25 ஆம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் வழியாக இயக்கப்பட்ட ரயில்களில் ரயில்வே துறை அதிகாரிகள் சார்பில் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி அக்.1 முதல் 15 ஆம் தேதி வரை 15 நாள்களில் சேலம் ரயில்வே கோட்டத்தில் மொத்தம் ரூ.48,61,055 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (18.10.24) பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, செல்லப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், சோமனூர், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையத்தில் உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, கனமழை எச்சரிக்கை, லேசான மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நேற்று, இன்று (அக்.16, 17) உள்ளிட்ட இரு தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவற்றதால் நாளை (அக்.18) முதல் மலை ரயில் மீண்டும் இயங்கும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திருகுமரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை வளர்ப்பவர்கள் மின் கம்பத்தில் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மற்றும் டிரான்ஸ் பார்மர் அருகில் ஆடு, மாடுகளை கட்டி வைக்கக் கூடாது. பள்ளமான பகுதிகளில் கொட்டம் அமைத்தும் மாடுகளை கட்டி வைக்கக் கூடாது. கால்நடைகளை மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்தசெய்தி குறிப்பில், இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கலர் நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது கண்காணிப்பில் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை 0422-2220922 மற்றும் 93616-38703 என்ற எண்களை அழைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாக இயக்கப்பட்டும் வந்தன. நேற்று மதியம் 3:15 மணிக்கு கிளம்ப வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று 7 மணி நேரம் தாமதமாக இரவு 10:20 மணிக்கு கிளம்பியது. இதனால் முன்பதிவு செய்திருந்த, சேலம், ஈரோடு, திருப்பூர் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
Sorry, no posts matched your criteria.