Coimbatore

News May 21, 2024

கோவையில் கனமழைக்கு வாய்ப்பு!

image

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

பேருந்து ஓட்டுநர்களுக்கு வேண்டுகோள்

image

கோவையிலுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில், மழைகாலத்தில் அரசு பஸ்களை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகாட்டி நெறிமுறைகள் இன்று வெளியிட்டனர். அதில் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியே எடுப்பதற்கு முன், கிளாஸ் வைப்பர் (கண்ணாடி துடைப்பான் ) மற்றும் முகப்பு விளக்குகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் கனமழை பெய்யும் போது, போதிய இடைவெளியில் இயக்குவது அவசியம் என்று தெரிவித்தனர்.

News May 21, 2024

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்

image

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிககிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, அதிக வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன மேலும் கோவை யானை வழித்தட விவகாரத்தில் தி.மு.க., அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்றார்.

News May 21, 2024

ரூ.416.03 கோடி சொத்து வரி வசூலித்து மாநகராட்சி சாதனை

image

கோவை மாநகராட்சியில் நடப்பு 2023-24 நிதியாண்டில் ரூ.409.42 கோடி, 2022-23 நிதியாண்டு நிலுவை ரூ.118.58 என மொத்தம் ரூ.528 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வார்டுக்கு ஒருவர் வீதம் வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டு சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டது.
நிறைவில் ரூ.370.32 கோடி, நிலுவை கணக்கில் ரூ.45.71 கோடி என ரூ.416.03 கோடி வரி வசூலித்து கோவை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.

News May 21, 2024

வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை

image

இயற்கை அழகை கண்டு ரசிக்க வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் வனவிலங்குகளை காணலாம் என்று ஆசையில் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி, சுற்றுலா பயணிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

News May 21, 2024

சாலைகளில் ஓடிய நீரால் போக்குவரத்துக் துண்டிப்பு

image

கோவை அன்னூர், எல்லப்பாளையம், குப்பேபாளையம் , சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

டெங்கு தடுப்பு பணிக்காக 800 பேர் நியமனம்

image

கோவை மாநகரில் டெங்கு தடுப்பு பணிக்கு 800 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில். மாநகரில் பழைய டயர்கள், உடைந்த தொட்டிகள், மற்றும் பழைய பொருட்களில் தேங்கிய நீரில், டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் பணியில் இப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும், இதற்காக 800 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

News May 20, 2024

உதகை: மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு

image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126-வது மலர்க் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 10-ம் தேதி துவங்கிய மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக மேலும் 6 நாட்களுக்கு மலர் கண்காட்சியை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

காவலர்களை பாராட்டிய எஸ்பி பத்ரிநாராயணன்

image

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் விஜயகுமார் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ஒன்றரை கோடி பணம், மற்றும் 9 சவரன் நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் வீடு புகுந்து திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். அவ்வாறு உரிய நடவடிக்கை எடுத்த காவலர்களுக்கு இன்று எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டினார்.

News May 20, 2024

கோவைக்கு வந்தனர் பேரிடர் மீட்பு படையினர்

image

கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வெள்ளம் சார்ந்த இயற்கை இடர்பாடுகள் நடந்தால் பொதுமக்களை மீட்க, 31 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் இன்று கோவைக்கு வந்தனர். இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077 அழைக்க உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!