India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலங்களில் வெப்பம் காரணமாக கோழி உற்பத்தி பாதிக்கப்படும். இந்த காலங்களில் கோழிகள் உணவு உண்ணுவதை குறைத்து நீரை அருந்துவதை மட்டுமே அதிகம் செய்யும் என்பதால் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், இன்று (ஏப்ரல்.23) கோவை மாநகரின் பல இடங்களில் கோழி இறைச்சி கடைகளில் 1 கிலோ கறி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் நடத்தி நேற்று (ஏப்ரல்.22) அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ் (28) என்பவர் திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய மலை ஏறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்ற இளைஞர் மலை ஏறி விட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (82) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப். 7 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அவருக்கு சிறை மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின், மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.
கோடை தொடங்குவதற்கு முன்பாகவே கோவையில் கடந்த பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தயங்குகின்றனர். மாலை 5 மணிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறைகிறது. இந்நிலையில், கோவையில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
100% வாக்களிப்பு என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6,124 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 64.81 % வாக்குப் பதிவு ஆகியுள்ளது. அதாவது, 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை என கோவை ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் இன்று கூறியுள்ளதாவது,
வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் ஏப்.24ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டுபாட்டு அறைக்கு சென்ற அவர் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
வெள்ளியங்கிரி வனதுறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது. மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு அனுமதிப்படுவர் என வனத்துறை கூறியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று கூறுகையில், “தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.