India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விமான பயணிகளின் அதிகரிப்பை தொடர்த்து கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது என இன்று (மே.23) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வானிலை காரணமாக 10 முதல் 20 நிமிடங்கள் முன்னர், அல்லது பின்னர் அல்லது குறித்த நேரத்தில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக வெளிவரும் தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் இன்று (மே.23) முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது
கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்க்கு தினமும் பல விமானங்கள் வந்து செல்கின்றது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் விமான நிலையத்தில் முதியவர்கள், மூத்த குடிமக்களின் உடைமைகளை எடுத்து வந்து தரும் வகையில் மே ஐ ஹெல்ப் யூ என்ற பணிப்பெண்களை நியமனம் செய்துள்ளது விமான நிலையம். இவர்கள் பயணிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி நேற்று (மே.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
விவசாயிகள் உயிர் உரங்கள் தழைச்சத்தை பெருக்க இயற்கை உரங்களை விவசாயிகள் பயண்படுத்த வேண்டும். செயற்கை உரங்களை பயண்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களிலும் வரும் ஜூன்.08 ஆம் தேதி அன்று தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற உள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று 94.50 அடியை எட்டி உள்ளது. பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
கோயம்புத்தூரில் நேற்று (மே.21) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆழியார் பகுதியில் 15 செ.மீட்டரும், PWD மக்கிநாம்பட்டி, PWD வாரப்பட்டி ஆகிய பகுதிகளில் 8 செ.மீ, கோவை தெற்கு பகுதியில் 6 செ.மீ, பொள்ளாச்சியில் 5 செ.மீட்டரும், கோயம்புத்தூர் AP பகுதியில் 4 செ.மீ கோவை TNAU, சூலூர், சின்னகாலர், வால்பாறை PTO ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறையை இன்று ஆட்சியர் தெரிவித்தார். மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம்,
இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.