India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆனைமலை ஒடையகுளம் பகுதியை சேர்ந்தவர் சபரீஷ் குமார் (32) தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி இருந்த அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று (மே24) கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.
இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கல்வி பயில 3,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் சேர இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் இன்று(மே 24) தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் வரும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை, சின்னவேடம்பட்டி அருகே பூங்காவில் நேற்று(மே 23) மாலை சருக்கு விளையாட்டு கம்பியில் விளையாடிய சிறுவர்கள் 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு குழந்தைக்கு 8 வயதும், ஒரு குழந்தைக்கு 4 வயதும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
சிறுவாணி, அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணையில் கடந்த 10 நாட்களாக மழைப்பொழிவு உள்ளதால் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் குடிநீர் வினியோக கால இடைவெளியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவை மாநகரில் குடிநீரை சிக்கனமாகவும், குடிநீர் அல்லாத உபயோகத்துக்கு நிலத்தடி நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி கடந்த ஆண்டு ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவத்தின் விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு உதவியதாக ரேகா, சாரதா, அந்தோனி, ஈஸ்வரன் உள்ளிட்ட 7 பேரயும் இவ்வழக்கில் இணைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, 7 பேர் மீதும் போக்சோ வழக்கு இன்று பதியப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும் 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலமாக காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக நேற்று பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர். அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகள் இடையே வியப்படையச் செய்தது
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மழைநீர் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை ப்ரூக்பீல்ட்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், நேற்று மழை பெய்தும் இன்று (மே.23)காலையில் மழை நீர் துளியும் இல்லாமல் பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்த வண்ணம் சுத்தமாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.