India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை செல்கின்றன. இதனால் உண்மையான எண்ணிக்கை தெரிவதில்லை. எனவே, 3 மாநிலங்களிலும் சேர்த்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம்(மே 25) தொடங்கியது. தொகுதி மாதிரி, நேர்கோட்டு முறை, நீர்நிலைகளில் கணக்கெடுப்பு என 3 நாள் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்றுடன்(மே 27) நிறைவு பெற்றது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அபுதாஹீர் . இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். வெளியில் வந்த பின் பண மோசடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு கோவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அபுதாஹீருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை அடுத்த மளுக்குபாறையில் இருந்து
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்று (மே25 ) சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதை கண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாலக்குடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தவோ வனவிலங்குகளை போட்டோ எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்த பெயிண்டர் மாரிமுத்து. இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கேபிஆா் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறைக்காக ரூ.3.70 கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகன சிறப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால், கல்லூரியின் முதல்வர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வால்பாறை PTO, வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சின்னக்காலர், UPASI தேனீர் ஆராய்ச்சி நிலையம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் பொள்ளாச்சியில் 1 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் தடை தொடா்பாக மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தினசரி சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மஞ்சப்பை ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோவை பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது தற்போது, புதிய திட்டமாக வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
எனவே, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in/
மூலம் இணையவழியில்
விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.
2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேற்காணும் இவ்விருதுக்கு விண்ணப்பம் இணையதள முகவரியான http://awards.gov.in/ மூலம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.05.2024ம் தேதிக்குள் இந்திய அரசுக்கு இணையதளத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கூறினார்.
வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பாபு என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகாந்தி பூ இரவில் பூத்துக் குலுங்கியது. பாபு என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் அழகான நறுமணத்துடன் பூ பூத்தது. முதலில் ஒரு சில பூக்கள் மெல்ல மெல்ல பூக்க துவங்கியது.
Sorry, no posts matched your criteria.