India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்ஐ கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் இன்று(மே 28) தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பைக்கில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வு கூட்டம் நேற்று(மே 27) ஆட்சியா் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், சூலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள், பல்லடம் தொகுதிக்கு 18 மேஜைகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகள் என மொத்தம் 101 மேஜைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இலவச ஆலோசனை முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. மே 31 ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. ஆட்டிசம், கற்றல் குறைபாடு, மன அழுத்தம், அதீத கோபம், வீடியோ கேம், இன்டர்நெட் மற்றும் செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாக உள்ள குழந்தைகள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
குற்றப்பிரிவு போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உமன்ஸ் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த Sunmaxs என்ற நிறுவனத்தின் மீதும் அதன் CEO ஆக இருந்த சிவராமகிருஷ்ணன், கீதா என்ற கீதாஞ்சலி ஆகியோர்கள் மீது இன்று கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே Sunmaxs நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் மனு தருமாறு தெரிவித்துள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை அவை தலைவர் புருஷோத்தமன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பேரூர், நகர நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் மே.1ஆம் முதல் இன்று வரை, மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் 63 நபர்களை கைது செய்து, 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், 26 நபர்களை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 87 கிலோ 245 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
சிறுவாணி அணை ஆங்கிலேய ஆட்சியின் போது 1890களில் கோவை நகரின் குடிநீர் தேவைக்காக சிறுவாணியின் குறுக்கே அணை கட்டி நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. 1920ல் சிறுவாணி ஆறு உருவாகும் பகுதியில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டு, மலையைக் குடைந்து 1.6 கி.மீ நீளத்துக்கு குகை அமைத்து மலையைத் தாண்டி கிழக்காக நீர் கொண்டு வரப்பட்டது. 1970இல் கேரள-தமிழக அரசு ஒப்புதலுடன் தற்போதுள்ள சிறுவாணி அணை கட்டப்பட்டது
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில் ஜாமீன் கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோவை வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆண்டுக்கு சராசரியாக 609 மி.மீ மழை பெய்கிறது. இந்த ஆண்டு பெய்துள்ள மழைக்கு சோளம், கம்பு, ராகி சாகுபடியினை செய்ய ஏற்ற நிலை நிலவுகின்றது. எனவே விவசாயிகள் இந்த பருவ மழைக்கு இதனை விளைவித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த போகம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மகள் தமிழ்ச்செல்வி, அண்ணன் மகள் புவனா ஆகிய சிறுமிகளுடன் நேற்று(மே 26) அப்பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளார். 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 1 மணி நேர தேடுதலுக்கு பின் மூவரையும் சடலமாக மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.