India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூரில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை PTO, UPASI தேயிலை அறிவியல் துறை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையார், வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சின்னக்கல்லார் பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து டில்லி மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள 5 நகரங்களான நியூ ஆர், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ கனடாவில் உள்ள வான்குவார் செல்ல முடியும் என்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. பின்னர், இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய கோவை அணி, இரண்டாம் நாள் முடிவில் 153 ரன்கள் சேர்த்தது. நதீர் (46), நவின் (52), பவன்ஸ்ரீ (49) சிறப்பாக விளையாடினர். போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கோவை அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்துக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்களை அதிகம் உற்பத்தி செய்வது, இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, கோவை மாவட்டத்தில் மானியங்கள் வழங்கப்படுவதாக இன்று வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி கூறினார்.
கோவைக்கு தொண்டாமுத்துார், ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோடைமழை துவங்கி இருப்பதால், விவசாயிகள் இப்போதுதான் சின்ன வெங்காயம் விதைப்பை துவங்கி உள்ளனர். அதனால் பட்டறையில் சேமித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் விலை அதிகரித்துள்ளதாக இன்று கூறினர்.
தென்கிழக்கு அரபிக் கடலில் மேல் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இன்றிலிருந்து (மே.30) தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள கோயம்புத்தூரிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. அங்கு மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற தடை செய்யபட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை முழுமையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் செல்போன், ஐபேட், மடிக்கணினி, போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை உள்ள எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்.
தினமணி நாளிதழ் போட்டோகிராபர் அஜய் ஜோசப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஜோசப் மறைவால் வாடும் குடும்பத்தார் மற்றும் ஊடக நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பி.ஆர்.நடராஜன் எம்பி இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.