Coimbatore

News June 1, 2024

கோவையில் இருந்து புறப்படாத விமானம்

image

கோவை -சார்ஜா இடையே ஏர் அரேபியா என்ற விமானம் இயக்க பட்டு வருகிறது. இந்த ஏர் அரேபியா விமானம் 160 பயணிகளுடன் கோவையிலிருந்து இன்று (ஜுன் 01) அதிகாலை 4.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் திடிர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணங்களால் விமானம் புறப்பட வில்லை மேலும் தற்போது வரை இந்த தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் இந்த விமானம் இன்னும் புறப்பட வில்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.

News June 1, 2024

இந்த வருடம் 2.25 இலட்சம் பேர் மலையேற்றம் – வனத்துறை.

image

கோவை பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க 51/2 கி.மீ தூரம் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பிப். முதல் இன்று வரை 2.25 லட்சம் பேர் மலையேற்றம் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 25 ஆயிரம் பேர் கூடுதலாக மலையேறி உள்ளதாக இன்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கோவை மலைப்பகுதியில், இரு நாட்களுக்கு (ஜூன்.1 மற்றும் ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்

News May 31, 2024

கோவை : 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மலைப்பகுதியில், அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

வேளாண் நோக்கத்திற்காக வண்டல் மணல் எடுக்க அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளில் விவசாய நோக்கத்திற்காக வண்டல் மண் எடுக்க தகுதி வாய்ந்த விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறு வேளாண் நோக்கத்திற்காக வண்டல் மணல் தேவைப்படும் விவசாயிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து விண்ணப்பங்கள் வழங்கி அதற்கான அனுமதியை பெற்று கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

வெள்ளியங்கிரி மலை ஏற்றம் இன்றுடன் நிறைவு 

image

கோவை அருகே மேற்குத்தொடா்ச்சி மலையின் ஒருபகுதியாக உள்ளது வெள்ளிங்கிரி மலை. இங்குள்ள 7 ஆவது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இதனை வழிபடுவதற்காக ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்தாண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெறுவதாக போளுவாம்பட்டி வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

News May 31, 2024

அரசு கலை கல்லூரியில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு.

image

கோவை அரசு கலை கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு கடந்த மே. 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 127 சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 90 இடங்கள் நிரம்பின. ஜூன் 10 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

News May 31, 2024

ரூ.22 லட்சம் மோசடி – பெண் உட்பட மூவர் கைது

image

கருமத்தம்பட்டி பெயிண்ட் கடை உரிமையாளர் நாகராஜிடம் கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ, கணவர் கிருஷ்ணகுமார், மாமா பெருமாள்சாமி உள்ளிட்டோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.6 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இப்புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் மூவரை பிடித்து விசாரித்ததில் மொத்தம் 10 பேரிடம் ரூ.22.55 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதனையடுத்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.

News May 30, 2024

3 பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம்

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் இணையதள வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது என இன்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

News May 30, 2024

மறைந்த பத்திரிகையாளருக்கு அஞ்சலி

image

கோவையில் தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பத்திரிக்கையாளர்கள், அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!