India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் பாலாஜி நகரில் ரேணுகா(40) என்பவர் மர்மமுறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றினர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவருக்குள் குதித்து வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மத்தியில் உள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். காவல்துறை அதிகாரி அருண் உடன் மற்ற பெண் காவலர்களை இணைத்து சவுக்கு சங்கர் பேசியதை தவிர்த்திருக்கலாம். சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது என்றார்.
கோவை மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று உத்தரவிட்டார். இந்நிலையில் கோவையில், 14 இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, 23 விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர்.
கோவை மாவட்டத்தில் இன்று 13 நீட் தேர்வு மையங்களில், நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 7128 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்வில் 6,932 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர். 188 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை நீட் தேர்வில் விண்ணப்பித்து விட்டு ஏன் தேர்வு எழுத வில்லை என தேர்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை, வடவள்ளி இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ் குமார், கீதா தம்பதியின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ(6). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணினியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார். ஆர்வத்தை கண்ட பெற்றோர் கொடுத்த பயிற்சியில் 50 தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மழை வாய்ப்புள்ளதால் கத்திரி வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காதுஎன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் சத்யமூர்த்தி இன்று தெரிவித்தார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று அவரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவை ஜே.எம்.1 வது நீதிமன்றத்தில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பிதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு தொடங்கியது.
பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை கல்லூரி இணையத்தளத்தில் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் இன்று கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.