India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிணத்துக்கடவு சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வந்ததால் உற்பத்தி அதிகரித்து விலை குறைந்துள்ளது. கடந்த வார மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.500க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெற்றார். அதனை தற்போது வரை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை தனியார் மண்டபத்தில் இன்று திமுகவினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என விருந்து தயாராகி வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
கோவை: தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தலட்சுமி. இவருக்கு 10வயதில் மகள் உள்ளார். அச்சிறுமி கடந்த மே.17ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக கோவை ஜி.எச்சில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். பிரேத பரிசோதனையில், சிறுமி அடித்து கொடுமைப்படுத்தியதால் இறந்தது தெரிந்தது. இப்புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியை கைது செய்தனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெற்றார். அதனை தற்போது வரை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை தனியார் மண்டபத்தில் இன்று திமுகவினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என விருந்து தயாராகி வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு (Academic Stream) மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிலுள்ள 171 காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு (Offline Counseling) 30.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கலந்துகொள்ளும்படி கல்லூரி சார்பில் தெரிவித்துள்ளனர்.
EPFO அமைப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிதி ஆப்கே நிகாட் 2.0 என்ற பெயரில் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடத்தி சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த வகையில் நாளை (ஜூலை 28) பாப்பம்பட்டி பிரிவில் உள்ள செல்வராஜ் மில்ஸ் நிறுவனத்தில் சிறப்பு குறைதீர்க்க கூட்டம் நடைபெற உள்ளது. எனவே PF வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை சரி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை பகுதியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருபவர் இந்திரா காந்தி. இவரது மையத்தில் பணிபுரிபவர் கவிப்பிரியா. இருவரும் சேர்ந்து கோவையை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேரிடம் மத்திய அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி வரை பெற்று ஏமாற்றியுள்ளனர். இப்புகாரின் பேரில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இந்திரா காந்தி, கவிப்பிரியா உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை ஆட்சியரகத்தில் வரும் ஜுலை.30 ஆம் தேதி அன்று மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை கோவை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து 1998 மற்றும் 1999 ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தற்போது இவரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.