India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா?
கோவை மாநகராட்சி புதிய மேயர் யார் என்பதை திமுக தலைமை இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததால், புதிய மேயருக்கான தேர்தல் ஆக.6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கவுள்ளது. இந்நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற, பெண் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும், அமைச்சர்கள் மூலம் பலர் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம். அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களும், 24,468 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். ஆனால், தற்போது வரை இத்திட்டம் 93% பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் எப்போது முழுமை பெறும் என கொங்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் அருந்ததியர் பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடுகளுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பை ஆகஸ்ட் புரட்சி எனக் கொண்டாடும் வீரமணி உள்ளிட்டோர், அத்தீர்ப்பில் உள்ள ‘க்ரீமிலேயர் ‘ குறித்தான தீர்ப்பையும் கொண்டாட வேண்டும் என்றார்.
கேரளா, கர்நாடக, ஆந்திராவுடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறை கடந்த வாரம் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழகத்தின் காட்டுயானைகள் கடந்தாண்டை விட அதிகரித்து வந்துள்ளது. அதை தொடர்ந்து கோவையில் கடந்த ஆண்டை விட யானைகளின் எண்ணிக்கை 243 அதிகரித்து 566 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 3063 யானைகள் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், கோவை ஐ.ஜியாக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி சென்னை பெருநகர ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் கே.பவானீஸ்வரி மாற்றப்பட்ட நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி டி.செந்தில் குமார் கோவை சரக ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி நாளை ஆகஸ்ட்5 பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்வோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- நேரிடையாக செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றி வேகமாறு காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. அந்தவகையில், கோவை உள்ளிட்ட 8 மாவட்டத்திற்கு இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவையில் மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கூறியதாவது. கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். இச்சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலைகள் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீரமைக்க முதலமைச்சர் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 01.05.2024 முதல் இன்று வரை, மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் 135 நபர்களை கைது செய்து, 88பேர் மீது வழக்கு பதிவு செய்தும், 47 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 196 கிலோ 220 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி பத்ரிநாராயணன் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.