Coimbatore

News August 8, 2024

கரையோர வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது.அதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால், ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் முழு கொள்ளளவை எட்டியதால் ஆழியார் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

கோவையில் நாளை லாரிக்கு அனுமதி இல்லை

image

கோவை மாநகர காவல் ஆணையர் இன்று கூறியதாவது, நாளை தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் அவினாசி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும், காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.

News August 8, 2024

கோவையில் இருந்து பீகாருக்கு வார ரயில்

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது,
கோவையில் இருந்து பீகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்க பட உள்ளது. மறுமார்க்கமாக, பரௌனி முதல் கோவை வரை வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு வரும் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த சிறப்பு ரயிலை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

News August 8, 2024

கோவையில் முதல்வர் நிகழ்ச்சி விவரம்

image

கோவையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக 11 மணிக்கு விமானநிலையம் வரும் முதல்வர் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தை 12 மணிக்கு துவக்கி வைத்து பின்னர் உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கிறார். இதனை தொடர்த்து கனியூரில் கருணாநிதி சிலை திறந்து வைக்க உள்ளார்.

News August 8, 2024

BREAKING: கோவை எஸ்பி மாற்றம்

image

கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் பத்ரி நாராயணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கார்த்திகேயனை புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கார்த்திகேயன் தற்போது திருவண்ணாமலை எஸ்பியாக இருந்துவருகிறார். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், பல பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 8, 2024

BREAKING கோவையில் கனமழை!

image

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

News August 8, 2024

கோவையில் இன்று மின்தடை

image

கோவையில் இன்று (ஆக.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: கோயில்பாளையம், சர்க்கார்சமகுளம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், பேரிகை, செட்டிப்பள்ளி, பீளமேடு புதூர், கணபதி, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி.

News August 8, 2024

கோவையில் பருத்தி மாநாடு

image

கோவை ரேஸ்கோர்ஸ் சைமா வளாகத்தில் இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் இன்று செய்தியாளர்களிடம்  பேசுகையில் அகில இந்திய பருத்தி மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் ஆக.9, 10 ஆம் தேதிகளில் நடக்கிறது. பருத்தி – எதிர்காலத்துக்கான நிலையான நூற்பொருள் எனும் கருவில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட பருத்தி துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 8, 2024

கோவையில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

கோவை வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வாயிலாக மறைந்த வழக்கறிஞர் உதயகுமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரியும், இன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

News August 7, 2024

கோவையில் 77 மனுக்களுக்கு தீர்வு- எஸ்.பி தகவல்

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 93 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 5 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 77 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

error: Content is protected !!