India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள அத்திக்கிடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 243 குட்டைகளும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 குளங்கள், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 குளங்கள் என்று கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பாசன வசதி பெறுகிறது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வரும் 27ஆம் தேதி அன்று சென்னையில் வழங்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 22 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இதில் கலந்துகொள்கிறார். இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
கோவை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதியில் இரயில்வே மேம்பாலம் அருகே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவினாசி சாலையை பயன்படுத்துவோர் பயனீர் மில் சாலையை பயண்படுத்தி செல்ல வேண்டும். அவினாசி சாலையை தவிர்க்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1,800 கோடி மதிப்பிலான அத்திக்கடவு-அவிநாசி நீர்த் திட்டத்தை நாளை 17ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த திட்டம் ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளங்களை செழுமைப்படுத்தும் என இன்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொள்ளாச்சி வட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பே. சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கபட்டது.
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துராமலிங்க தேவர் குறித்தும் அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோவை நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்தார். அவர் மீது மேலும் ஒரு குண்டர் சட்டம் இருப்பதால், சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 42 மாதங்களில் 16,820 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், கோவை 4ஆம் இடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.