India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு (02.08.2024 முதல் 04.08.2024 வரை) மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை (லிட்) மேலாண் இயக்குநர் நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு (02.08.2024 முதல் 04.08.2024 வரை) மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை(லிட்) மேலாண் இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் அரசு பிற்பட்டோர் நல மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு உரிய வசதிகள் உள்ளனவா என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவியர்களிடம் இங்கு எதாவது குறைகள் உள்ளனவா, உணவுகள் தரமானதாக உள்ளதா என்று கேட்டறிந்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வழியாக துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்கள் மேற்கூறிய பல்கலைக்கழகங்களின் இளமறிவியல் (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் 02.08.2024 முதல் 11.08.2024 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள முகப்பில் திறக்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் விமானப்படை நிர்வாக கல்லூரி ஆகியவை சார்பில் கோவையில் விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் போர் விமானங்கள் செயல்படும் முறை குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், விமானப் படையின் சிறப்பு வாகனங் களின் மாதிரிகள் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாட பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் இன்று முதல் தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்க உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கோவையின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஜூலை 3இல் ராஜினாமா செய்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஆக.6 காலை 10.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் செயல்படுவார். விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு அதனை தொடங்கி வைத்தார்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு, 2015ல் ‘டெல்டா ஸ்குவாடு’ மீட்புப்படை துவக்கப்பட்டது.
இந்தப் படையில்
லெப்டினன்ட் ஈசன் தலைமையில் 25 இளம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர்
மீட்புப்பணியில் ஈடுபட இந்த மீட்புப்படையினர் நேற்று (ஆகஸ்ட் 1) காலையில் கேரளம் புறப்பட்டுச் சென்றனர். மீட்புப்பணிக்குத் தேவையான பல்வேறு மீட்பு சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளில், மழைப்பொழிவு அதிகம் உள்ளதால் நொய்யலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு, புட்டுவிக்கி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து சென்றது. அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால், நொய்யலில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.