India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயக்குமார் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக, அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். “தேசிய கட்சியின் மாநில தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை யார் உயிருக்கும் உத்தரவாதமில்லை. அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆனால், காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் நேற்று வழக்கறிஞரை வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்துள்ளனர். ‘வழக்கறிஞரை ஏன் வெட்டி கொலை செய்தீர்கள்?’ என சரணடைந்த நபர்களிடம் கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூலிப்படையாக செயல்பட்டார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2-வது நாளாக இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10-வது தேர்ச்சி அல்லது 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவைக்கு இன்று வருகை தந்த திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி புத்தகம் வழங்கி வரவேற்றார்
கோவை மாவட்டத்தில் நாளை ஆடி18-யை முன்னிட்டு பொதுமக்கள் நமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் குடுப்பது வழக்கம். இதற்காக கோவை மாநகரில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். நீர், நிலைகளில் அதிக அளவு நீர் வரத்து உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மருதமலை திருக்கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மூலமும் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான ரயில் சேவை நேற்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 10.22 மணியளவில் சேலம் ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் வரும் 6ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.