India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இன்று காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் கோவை, வால்பாறை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றைய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம் எனத் தெரிகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்லுாரி மாணவர்கள் எனக் கூறி வாடகைக்கு வீடு கேட்டு வருவோரிடம், முழு விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் கட்டாயம் பெற வேண்டும். அப்போதுதான், மாணவர்கள் போர்வையில் குற்றப் பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண முடியும். கல்லுாரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துதல், குற்ற பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருப்பது, தயவு, தாட்சண்யம் இன்றி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை எஸ்பி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க செப்-2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://sdat. tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 9,901 பேர். கல்லூரி மாணவர்கள் 10,378 பேர், மாற்றுத் திறனாளிகள் 438 பேர், அரசு பணியாளர்கள் 560 பேர். பொதுப்பிரிவினர் 878 பேர் என மொத்தம் 22,155 பேர் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 47 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத்திற்கு புறமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கோவை அடுத்த சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் தனது இருசக்கர வாகனத்தில் விளாங்குறிச்சி- சரவணம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் படுகாயமடைந்து இன்று உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் லாரி ஓட்டுநர் பால்துரை மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் 25 வரை கோவை மாநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக 126 பைக் ஓட்டுநர்கள், 18 உயர் ரக கார் ஓட்டுநர்கள், 52 கார் ஓட்டுநர்கள் என மொத்தமாக 178 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜாவில் இருந்து
கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமானத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கடத்தி வந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை துணி வியாபாரி சங்கம் (சிசிஎம்ஏ) சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் ஏற்கனவே தலைவராக இருந்த ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கமல் பாஷா துணை தலைவராகவும், முரளி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மின்பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஆக.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, லாலி ரோடு, டி.பி.ரோடு ஒரு பகுதி, கவுலிபிரவுன் ரோடு, ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒரு பகுதி, பெரிய தடாகம், சின்னத்தடாகம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், எளிதாக தமிழில் பேச வேண்டும். அவர்களுக்குள் சரியான புரிதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான், அவர்கள் செய்யும் பணி எளிமையாகும். தகவல் தொடர்பு சுலபமாகும். உற்பத்தியில் பாதிப்பு வராது. இப்பயிற்சி, விரைவில் அந்தந்த தொழிற்சாலை வளாகங்களிலேயே, பணி நேரம் அல்லாத நேரத்தில் இணைய வழியில் நடைபெறும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.