India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன் ராம்குமார் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் நாளை, நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்திக் – அர்விந்த்சாமி
நடிக்கும் மெய்யழகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதனால் திரைப்பட நடிகர்களான சூர்யா, ஜோதிகா, கார்த்திக், அரவிந்த் சாமி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர் இதனால் கொடிசியா வளாகத்தில் நாளை அதிக ரசிகர்கள் வருகை தர உள்ளனர். இதற்காக இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கு. குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் பராமரிப்பு குறித்தான மாவட்ட அளவிலான ஒரு நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளரிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில் பொது இடங்களில் அனுமதியின்றி உணவு போட்டிகள் நடைபெற்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை ) கோவை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அன்னூர்- ஓதிமலை சாலையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நாளை (ஆகஸ்ட் 31) உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பல பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் பிரிவில் 12 பேர், வீராங்கனைகள் பிரிவில் 12 பேர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் திறமையின் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தஞ்சையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தின் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இங்கு நடைபெற்ற பிரியாணி போட்டி, காவல்துறையில் எந்தவித முன் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லுாரி தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தலைமையேற்று பேசினார். அப்போது, பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றார்.
கோவையை சேர்ந்த 28 வயது கர்ப்பிணி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது திடீரென வலி அதிகமாகியுள்ளது. இதனையடுத்து டிரைவர் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அப்போது, கர்ப்பிணிக்கு வலி மேலும் அதிகரிக்கவே அங்கிருந்த பெண் டாக்சி டிரைவர் அப்பெண்ணை தனது டாக்ஸியில் ஏற்றி உடனடியாக பிரசவ வார்டு பகுதிக்கு கொண்டு சேர்த்தார். அவசரம் கருதி உடனடியாக செயல்பட்ட பெண் டாக்சி டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Sorry, no posts matched your criteria.