India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச பிரிவில் 19,751 பேர், உள்நாட்டு பிரிவில் 2,59,600 பேர் என மொத்தம் 2,79,351 பேர் பயணம் செய்துள்ளனர். சரக்கு போக்குவரத்து பிரிவில் ஆகஸ்ட் மாதம் சர்வதேச பிரிவில் 1,037 டன், உள்நாட்டு பிரிவில் 202 டன் என மொத்தம் 1,039 டன் சரக்கு கையாளப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், ஒரு லட்சத்து, 11 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது . இதில் 10 ஆயிரம் நாய்களுக்கே கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் மூன்று அமைப்புகள் ஈடுபடுகின்றன. மாதம் 2,000 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து விடலாம் என இலக்கு நிர்ணயித்திருப்பதாக கோவை
மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி மாலை 3. 45 மணிக்கு புறப்படும் சென்னை கோவை சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த ரயில் கோவையில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை சென்னை சிறப்பு ரயில் 06152 மறுநாள் காலை 7. 35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என்றனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ‘மனிதன் கையில் சுழலும் உலக உருண்டை’ சிலை ஒன்றும் ஜல்லிக்கட்டு காளையை வீரன் அடக்குவது போன்ற வெண்கல சிலையையும் நிறுவப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த சிலைகளின் துவக்க விழாவில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை நடைபெறும். இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் முகாம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை நடைபெறும். வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் சிலை அமைந்துள்ளது. இங்கு இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்த்து அவரது வீர தீர நினைவுகளை அனைவரது மத்தியிலும் எடுத்துக்கூறி, அவரின் தியாகங்களை சுட்டி காட்டி அவரது புகழ் பாடினார்.
கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சமுதாய அமைப்பாளர்களாக பணிபுரிய, தகுதியானவர்கள் நகர்ப்புற வாழ்வாதார மைய மேலாளர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2வது தளம், பழைய கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், கோவை- 641 018′ என்ற முகவரிக்கு வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாதம் ரூ.6,000 ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 74017 03489 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான ‘G.O.A.T’திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குதான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் ‘பிராட்வே சினிமாஸ்’ திரையரங்கில் மட்டும் முதல் காட்சி காலை 7 மணிக்கு வெளியாகிறது. இதனால் கோவை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.