India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கோவையில் அடுத்த 10 முதல் 17 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என கோவை வெதர்மேன் சந்தோஷ் கூறியுள்ளார். மேலும், ஏப்ரல் இறுதி வாரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே மாதம் தொடக்கத்தில் நல்ல மழை இருப்பதாக தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 36 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.14000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கோவை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் நாளை (ஏப்.1) காலை 6.30 மணிக்கு கோவை பாராளுமன்றத்துக்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, மருதமலை அடிவாரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார். இதனை முன்னிட்டு அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட பாஜக தலைவர் J.ரமேஷ் குமார் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு பணியாற்றிய சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய பாதிரியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தின் உள்ளே திடீரென வந்து கதவு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து சூறையாடினர். பின் நேற்று அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பாதிரியர்களை கைது செய்தனர்.
கோவை, வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம்(50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கடந்த மாதம் முதல் இது வரை 5-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ரகுராம் நீரிழிவு நோயாளி என்பது குறிப்படத்தக்கது.
கோவையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச்.30) கட்சி வேட்பாளர்களுக்கான சின்னங்களும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை புரூக் பீல்டு வர்த்தக வளாகத்தில் இன்று (மார்ச்.30) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர்கள் 100க்கும் மேற்பட்ட கோலம் வரையப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு மகளிர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் தமிழக காவல்துறை செல்கிறது. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாக முதலமைச்சர் பயன்படுத்தி வருவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில் – கோவை ரயில் மார்.30, 31, ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கோவை- நாகை ரயில் மார்.30, 31, ஏப்.1ஆம் தேதிகளில் நெல்லை – நாகை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுப்பது போல் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ ஜூலை 2023-க்கு உரியது என்றும், எனவே தேர்தல் விதிமுறைகளின் வரம்பிற்குள் வராது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.