Coimbatore

News April 28, 2024

கோவையில் எல்.முருகன் பேட்டி 

image

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேற்று நீலகிரி ஸ்டார்ங் ரூம் (strong room) கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணி. எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.

News April 28, 2024

கோவையில் மோதல்; 10 பேரின் நிலை?

image

நேற்று சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர் ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். பின், மீண்டும் சென்னை செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதை கண்ட ஆட்டோ டிரைவர் அவரை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து விடுவித்தனர்.

News April 28, 2024

கோவை: அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு.

image

பவானிசாகா் கோடேபாளையத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம்.மனைவி துா்கா.இவருக்கு புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது.அங்கு கடந்த 24 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.அவரது உடல்நிலை மோசமடைந்ததை எடுத்து கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர்.நேற்று அவர் உயிரிழந்தார்.மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News April 27, 2024

வாக்கு எண்ணிக்கை நிறுத்த கோரிக்கை

image

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று வாக்களிப்பு நாள் வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பே 1,00,000 வாக்குகள் காணவில்லை என புகார் கூறினார். இந்த நிலையில் இன்று விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை முடிவை நிறுத்தி வைக்கக்கோரி ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News April 27, 2024

எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

image

வால்பாறை அருகே கருமலை தொழிலாளர்கள் 1000 பேர் இன்று தேயிலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் . சலுகைகள் மற்றும் முறையாக சம்பளம் வழங்க வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கருமலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 27, 2024

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு; ஆணையர் எச்சரிக்கை 

image

கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களும் வற்றிவிட்டது.குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் அமைத்து,குடிநீர் அல்லாத தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் தண்ணீர் மட்டமும் குறைந்து கொண்டே வருவதாக இன்று கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

News April 27, 2024

கோயம்புத்தூரின் அழகிய குரங்கு அருவி!

image

பொள்ளாச்சி- வால்பாறை சாலையில், ஆழியாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது குரங்கு அருவி. சுமார் 18 அடி உயரத்திலிருந்து விழும் இவ்வருவிக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிப்படுகின்றனர். குரங்கள் அதிகமாக இருக்கும் இம்மலையில் உள்ளது. இங்கு சற்று வழுக்கும் பாறைகள் சற்று அதிகமாக உள்ளன. தற்போது இங்கு வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

News April 27, 2024

கோவை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

கோவை பந்தயசாலை பகுதியில் இன்று காலை (ஏப்ரல்.27) அதிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நிஜாஸ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தயசாலை போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கோவையில் நேற்று (ஏப்.26) 102.56 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கோவை மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கோவை மாணவி, அமெரிக்காவில் கைது

image

பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். இதில் அமெரிக்காவில் படித்து வரும் கோவை மாணவி அச்சிந்தியாவை அமேரிக்கா போலீசார் கைது செய்தனர்.