Coimbatore

News May 3, 2024

மெகா வேலை வாய்ப்பு முகாம்

image

மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆக்குருதி சார்பில் ப்ராஜெக்ட் திரலக்ஸா மெகா வேலை வாய்ப்பு முகாம் மற்றும் தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சியின் நிறைவு நாள் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஆலம் மூலிகைப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்ட்டின் குரூப் ஆப் அறக்கட்டளையின் தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்

News May 2, 2024

ஜிசிடி கல்லூரி வளாகத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை

image

கோவை தொகுதியில் வாக்குகள் பதிவான இவிஎம் இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதனை பாதுகாக்க வரும் மே.2 காலை 6 மணி முதல் மே.6 காலை 6 மணி வரை ஜிசிடி கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வடகோவை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல பகுதிகள் தற்காலிக ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதித்து மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது.

News May 2, 2024

தனியார் அடுக்குமாடி குடியிருப்புகாக பாலம்

image

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில், ஈஷா மின் மயானம் அருகே நொய்யல் ஆற்றின் கிளையான ராஜவாய்க்காலில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய புளியமரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்காக இந்த வழித்தடம் போடப்படுவதாக கூறப்படுகிறது. 40 அடி அகலம் கொண்ட ராஜ வாய்க்காலில், 10 அடி அகலத்திற்கு பாலம் கட்டி, மீதமுள்ள கால்வாய் மூடப்பட்டுள்ளதாக இன்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

News May 2, 2024

40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெயில் அளவு கூடுதல்

image

கோவையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதன்படி, கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவர் சத்யமூர்த்தி இன்று கூறினார். மேலும், ‘நடப்பாண்டில் கால நிலை மாற்றத்தால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

News May 2, 2024

தண்ணீரை மாசு படுத்தினால் கடும் தண்டனை

image

கோவையில் பல்வேறு அணைகள் நீர் இல்லாமல் வரண்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் ஆனைகட்டி வழியாக வந்து கேரள நீர் நிலைகளை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சோலையூர் ஊராட்சி நிர்வாகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக மக்கள் கேரள நீரை மாசு படுத்தும் பட்சத்தில் 6 மாதம் முதல் 8 மாதம் சிறை தண்டனையும் 10000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

News May 2, 2024

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது – தந்தம் பறிமுதல்.

image

வடவள்ளி பகுதியில் யானைத்தந்தம் விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சாய்பாபா காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனியை சேர்ந்த விசாகன், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பிரிட்டோ என்பதும் தந்தத்தை விற்க முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்து தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

கோவை: தபால் வாக்குகள் எண்ண 6 குழுக்கள் தயார்

image

கோவையில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மட்டும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராக ஒரு தாசில்தார், வாக்குகளை எண்ணுவதற்கு உதவியாளராக ஒருவர் என 3 பேர் நியமித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News May 2, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்த 80 கடைகள், நிறுவனங்கள், 78 உணவு கடைகள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 162 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

கோவை அருகே தங்கும் விடுதிக்கு சீல்

image

வால்பாறையை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் ஸ்ரீராம் தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த தோட்ட வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வால்பாறை கூட்டுறவு காலனியை சோ்ந்த ராம் பிரசாத், ஸ்டேன்மோா் எஸ்டேட்டை சோ்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் விடுதி அனுமதியின்றி செயல்படுவது தெரிந்து அதனை நேற்று சீல் வைத்தனர்.

News May 1, 2024

கோவை: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.