Coimbatore

News October 25, 2024

மாணவர்களுக்கு கத்திக்குத்து: 8 பேர் மீது வழக்கு பதிவு

image

தேனியை சேர்ந்த ராகுல் கோவை சவுரிபாளையத்தில் நண்பர்களுடன் தங்கி தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். அங்கு 17 வயது மாணவரும் படித்து வருகிறார். இருவருக்கும் சீனியர் ஜூனியர் என தகராறு ஏற்பட்டது. கடந்த 23ஆம் தேதி அறைக்கு சென்ற சில மாணவர்கள் ராகுல், தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா உள்ளிட்டோரை கத்தியால் குத்தியுள்ளனர். இப்புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 24, 2024

அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

image

கோவை  ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக நாளை கோவை, சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது

News October 24, 2024

முதலமைச்சர் கோப்பை போட்டியில் 3வது இடம் பிடித்த கோவை

image

கோயமுத்தூர் மாவட்டம் முதலமைச்சர் கோப்பை போட்டியில் கோவை மாவட்ட அணி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 31 தங்க பதக்கங்களை கைப்பற்றி மொத்தம் 93 பதக்கத்துடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 2-ம் இடத்தை பெற்றது. 23 தங்கம் பதக்கம் உட்பட 102 பதக்கங்களை கைப்பற்றி கோவை மாவட்ட அணி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

News October 24, 2024

ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

image

மதுக்கரை வட்டம், பாலத்துறை கிராமத்தில் ஆதித்யா திருமண மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 13.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்காக நாளை காலை 11 கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், பாலத்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளனர்.

News October 24, 2024

செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை சந்திக்கலாம்

image

கோவை மத்திய சிறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்ப மனு கொடுத்து சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதில், செல்போனில் டோக்கன் பெற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கி சந்திக்கலாம் என்றனர். 

News October 24, 2024

கோவை-சீரடி இடையே வரும் 27ல் நேரடி விமான சேவை

image

மும்பை அருகே சீரடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. மேலும் உலகின் இரண்டாவது பணக்கார கோவிலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து முதல்முறையாக வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் கோவை-சீரடி இடையே நேரடி விமான சேவையை துவங்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

கோவையில் பேருந்து நிலையங்கள் தற்காலிக மாற்றம்

image

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூரிலும், கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூரிலும், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலும், குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

image

கோவை அருகேயுள்ள க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடியாக இங்கு சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 24, 2024

தீபாவளி: கோவையில் இரவு 1 மணி வரை அனுமதி

image

கோவை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

News October 23, 2024

சொத்து வரி உயர்வை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தல்

image

கோவை மாநகராட்சி முழுவதும் தற்பொழுது உயர்த்தியுள்ள ஆறு சதவீத சொத்துவரி உயர்வை உடனடியாக முழுவதும் ரத்து செய்ய வேண்டும் அதோடு வரி கட்டாதவர்களுக்கு ஒரு சதவீத அபராத வரியையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக மாமன்ற குழு தலைவரும் 26வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சித்ரா வெள்ளியங்கிரி, கோரிக்கை விடுத்துள்ளார். 

error: Content is protected !!