Coimbatore

News October 29, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கோவையில் தனியார் கல்லூரி மாணவன் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து 4வது மாடியில் இருந்து குதித்தில் கை, கால் முறிவு ஏற்பட்டது. ➤கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். ➤கோவையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டத்தில், விதிமுறைகளை மீறிய 32 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

News October 29, 2024

இந்த வருடத்தில் 61 நபர்கள் மீது குண்டர்

image

கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

புலி நடமாட்டம் உறுதி

image

கோவை வனப்பகுதியை ஒட்டிய ஊர்களில் புலி நடமாட்டம் இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதை அறிய 400 தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவையை ஒட்டிய வனப்பகுதியில் புலிகள் நடமாடி போளுவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் சில மாதங்களாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள வனத்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

News October 29, 2024

கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீடு

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஷர்மிளா, கோட்டாட்சியர்கள் கோவிந்தன், சிவகுமார் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

கோவையில் அதிர்ச்சி: பள்ளியில் ராகிங்!

image

கோவை அவினாசி ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் நேற்று +1 மாணவர் ஒருவர், 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தனது காலில் விழவைத்து ராகிங் செய்து கொண்டிருந்தார். இதை 6ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு +1 மாணவர், நீ எப்படி ஆசிரியர்களிடம் சென்று கூறலாம் என்று 6 வகுப்பு மாணவனை தாக்கினார். இதுகுறித்து பந்தய சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 29, 2024

மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அறிவிப்பு

image

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மொத்தம், 2 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர், 12ம் தேதி காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது. இதனை நேற்று மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

News October 29, 2024

கோவை: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 4 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகளும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 540 பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 1030 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

News October 29, 2024

தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் வசதிக்காக பஸ்கள் இயக்கம்

image

தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை கோவையிலிருந்து 2,495 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் கொடிசியாவில் இருந்து இயக்கப்படும். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம், பஸ் இயக்கத்தில் குறைபாடுகள், சந்தேகங்களுக்கு 1077, 0422 – 2306051 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி: வதந்தியை நம்பாதீர்

image

மத்திய அரசு வழங்கும் ரேசன் அரிசியில், மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 100 கிலோவுக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து அரிசி கலந்து வழங்கப்படுகிறது. சிலர் இதை, பிளாஸ்டிக் அரிசி என வதந்தியை கிளப்பி விடுகின்றனர். பொதுமக்கள் நம்ப வேண்டாம். அந்த அரிசியை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது, என்று கோவை மாவட்ட பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

சொந்த ஊர் செல்ல கிளம்பிய மக்களால் ஸ்தம்பித்த கோவை

image

தீபாவளியை நாளை மறுநாள் (அக்.31) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்த காரணத்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியது.

error: Content is protected !!