India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் கைப்பேசி மூலம் பம்ப்செட்களை இயக்க உதவும் கருவிகளை வாங்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். அதன்படி மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் கோவை மற்றும் பொள்ளாச்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இதற்காக வரும் 1ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தபோது, விஜய் குறித்த கேள்விக்கு என்ன வாக்கு வங்கி இருக்கு என்று கேட்டு மிகவும் டென்ஷன் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, என்ன ஒரு வாக்கு வாங்கி இருக்கின்றது என்று தெரியாத சூழல் இருக்கிறது. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறினார்.
கோவை எஸ்.பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டிய எண்கள்: 94981-81212, வாட்ஸ் அப்: 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண் குறித்த விபரங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
➤ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் ➤கோவையில் 65 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் ➤பசுமை கோவை செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் ➤துக்க வீட்டில் தீ விபத்து: பலி 3 ஆக உயர்வு ➤ஹாக்கி மைதானம் அமைக்க அமைச்சர் ஆய்வு ➤கோவை வந்தடைந்த செந்தில் பாலாஜி ➤நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி ➤கோவை சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ➤கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் கீழ் தமிழகத்தின் பாதுகாப்பு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை எஸ்பி கார்த்திகேயன் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும். இந்த ஆண்டில் இதுவரை 65 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.