Coimbatore

News November 22, 2024

வங்கி வாடிக்கையாளர்களுக்கு டி.எஸ்.பி அறிவுறுத்தல்

image

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் பணம் எடுத்து தருவதாக கூறினால்,ஏ.டி.எம்.,கார்டை கொடுக்க கூடாது. சந்தேகப்படும்படி வங்கி வாசலில் யாரேனும் நின்றிருந்தால்,அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.என்று வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

கோவை அருகே திடீர் தீ விபத்து

image

கோவை விமான நிலையத்திலிருந்து இரு பயணியரை ஏற்றி கொண்டு அவிநாசி ரோட்டில் கார் ஒன்று நேற்று சென்றுள்ளது. சிஐடி கல்லுாரி அருகே வந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார். அதற்குள் காரில் தீ பரவியது. விரைந்து சென்ற பீளமேடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட பழுதே காரணம் என தெரிந்தது.

News November 21, 2024

கோவை: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤இரவு நேர ரோந்து போலீசார் விவரம் ➤போதை மாத்திரை விற்பனை செய்த 10 பேர் கைது ➤அன்னூரில் மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு ➤கோவையில் லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு ➤ஓம்கார் பாலாஜி ஜாமின் கேட்டு மீண்டும் மனு ➤தேசிய அளவிலான டேக்வாண்டோ: கோவை மாணவி தேர்வு ➤கோவையில் ரூ.7000 மானியம் ➤கோவை வருகிறார் அண்ணாமலை ➤விஜய் குறித்த கேள்வி: டென்ஷனான அமைச்சர்.

News November 21, 2024

கோவை: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

News November 21, 2024

கோவை: போதை மாத்திரை விற்பனை செய்த 10 பேர் கைது

image

கோவை கரும்பு கடை காவல்துறையினர், இன்று ரோந்து சென்றபொழுது, கரும்பு கடை பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்ததை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், தனுஷ், நவ்பெல், முஜி, சேலம் பிரவீன் என 10 பேரை கைது செய்த காவல்துறையினர், 510 போதை மாத்திரை, கஞ்சா, செல்போன்களை காலை பறிமுதல் செய்து 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 21, 2024

கோவை அருகே மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

image

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவர் வீட்டில், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரைச் சூடாக்கியுள்ளார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவரது 3 வயது மகன், எதிர்பாராமல் அதில் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 21, 2024

BREAKING: கோவையில் லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு 

image

கோவை-திருச்சி சாலையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ராமநாதபுரம் இன்று பகுதியிலிருந்து வலது புறமாக திரும்பியுள்ளது. அப்போது டிப்பர் லாரிக்கு பின்னால் பைக்கில் இரண்டு வாலிபர்கள் திடீரென லாரி திரும்பியதால் பைக் நிலை தடுமாறியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இறந்த வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 21, 2024

ஓம்கார் பாலாஜி ஜாமீன் கேட்டு மீண்டும் மனு

image

இந்து மக்கள் கட்சி சார்பில், இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓம்கார் பாலாஜி ஜாமினில் விடுவிக்க கோரி, தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் கோர்ட் ‘டிஸ்மிஸ்’ செய்தது. இதனால், மீண்டும் ஜாமின் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

News November 21, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில்: ஆட்சியர் தொடங்கி வைப்பு

image

கோவை மாவட்டம் தெற்கு வட்டம் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர், மேயர், மத்திய மண்டல தலைவர், வார்டு கவுன்சிலர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 21, 2024

தேசிய அளவிலான டேக்வாண்டோ: கோவை மாணவி தேர்வு

image

கோவை ஆர்.எஸ். புரம், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பயிலும் மாணவி அனன்யா சிங். கடந்த ஜூலை மாதம் திருச்சியில் நடந்த மாநில அளவிலான ‘டேக்வாண்டோ’ போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற இவரை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமமானது மத்தியபிரதேசத்தில் வரும் டிச., 20 முதல், 24ம் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான ‘டேக்வாண்டோ’ போட்டிக்கு தேர்வு செய்துள்ளது.

error: Content is protected !!