India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அரசு என்றாலே சட்ட ஒழுங்கு சரியாக இருக்காது, ரவுடிகளின் ஆட்சி தான் நடக்கும். திமுக எம்பிகள் பேசுவது எல்லாமே பொய். மாநிலத்தின் முதல்வர் எம்பிகளுக்கு பொய் பேசக்கூடாது’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்“ என க் கூறினார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (நவம்பர் 23) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்தியாவின் தொழில்துறையில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. வரலாற்று வெற்றியை அளித்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா, அடுத்ததாக, நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 17-ம் தேதி பூஜையுடன் தொடங்குவதாக இருந்தது. நடிகர் த்ரிஷாவின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடங்கவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை வரும் 27-ம் தேதி கோவையில் நடக்கிறது. 28-ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
கோவையில் இன்று நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலஜி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்டம் திமுகவின் கோட்டையாக உள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையை முழுமையாக வெல்ல பணியாற்ற வேண்டும். தேர்தலின்போது திமுக மீது போடப்பட்ட 80 விழுக்காடு வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
கோவை பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் இன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத் தலைமையில் கூட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், உதவி ஆட்சியர் பயிற்சி அங்கித் குமார் ஜெயின் என பலரும் கலந்து கொண்டனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரம், கொங்கு தமிழ், இதமான வானிலை என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய கோயம்புத்தூருக்கு நாளை 220வது பிறந்த நாள். முதலில் ‘கோவன்புதூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் கோயம்புத்தூர் என மாறியது. 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் நவம்பர் 24ம் தேதி கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது.
கடவுள் ஐயப்பன் மீதும் அவருக்கு மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் பாடியதாக கானா இசைவாணி மற்றும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
கோவை கடந்த 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய குழு நிர்வாகி வேணுகோபாலை விமான நிலையத்தில் வழி அனுப்ப வந்த மயூரா ஜெயக்குமார் மற்றும் கட்சியின் மாநில செயலாளர் கோவை செல்வம் தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. கோவை செல்வம், மயூரா ஜெயக்குமார் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். அதன்படி இன்று மயூரா ஜெயக்குமார் பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கு நவ.29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனர் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.