Coimbatore

News November 25, 2024

ராணுவத்தினருக்கு கோவை கலெக்டர் அறிவிப்பு

image

கோவை ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் படைவீரர்கள் ராணுவம் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய, சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் சார்பாக (ஸ்பர்ஸ்) ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் நாளை (நவ.26) கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்றார்.

News November 24, 2024

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு 

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 24, 2024

கோவை விழாவில் கலை நிகழ்ச்சி

image

கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இன்று கோவை விழாவில் ஒரு பகுதியாக கோவையின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையிலும் வீதி எனும் கலை நிகழ்ச்சி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதில் கிராஸ் கட் சாலை துவக்கத்திலிருந்து பாரம்பரிய கலைகள் நடைபெற்றன.

News November 24, 2024

கோவையில் 22 இடங்களில் முதல்வர் மருந்தகம்

image

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின், மாவட்ட அளவிலான விழா நடந்தது. இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 கூட்டுறவு சங்கங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 22 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

News November 24, 2024

முழு வீச்சில் மாசாணி அம்மன் கோவில் திருப்பணிகள்

image

கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணி அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 6.12.2024 வெள்ளியன்று நடைபெற உள்ளது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் திருப்பணிகள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

News November 24, 2024

உதயநிதி பிறந்தநாள்: ஆணழகன் போட்டி

image

கூடலூர் தனியார் மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி, இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் இணைந்து 5வது மிஸ்டர் உதயநிதி கிளாசிக் என்ற தலைப்பில் 2024 ஆம் ஆண்டின் ஆணழகன், பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. மா.செயலாளர் தொ.அ.ரவி தலைமையில் நேற்று நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இளைஞரணி து.அமைப்பாளர் விக்னேஷ் ஒருங்கிணைத்தார்.

News November 24, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நவம்பர் 2024 ஆம் மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் 29.11.2024 வெள்ளிக்கிழமை 09.30 மணியளவிலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர், தலைமையில் நேரடியாக நடத்தப்பட உள்ளது என்றார்.

News November 24, 2024

கோவை எம்எல்ஏ பிரதமர் மோடிக்கு புகழாரம்

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று (நவ.23) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு” என்பதைப் போல, தேச ஒற்றுமையையும் சமூக சமத்துவத்தையும் பேணும் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கால்பதிக்கும் இடங்களிலெல்லாம் வெற்றிவாகை சூடுவார் என்பதற்கு மராட்டிய மண்ணில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி மற்றொரு சான்று என்றார்.

News November 24, 2024

ஒரே நாளில் 16 ஆயிரத்து 960 விண்ணப்பங்கள்

image

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம், 3,117 ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்தது. புதிய வாக்காளர்களாக பட்டியலில் பெயர் சேர்க்க, 7,223 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம் செய்ய, 2,078, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகள் மேற்கொள்ள, 7,659 விண்ணப்பங்கள் நேற்று பெறப்பட்டன. நேற்று ஒரே நாளில் மொத்தம், 16,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!