India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை என கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி சற்று முன்னர் வெளியிட்ட செய்தி குறிப்பின் வாயிலாக அறிவித்துள்ளார்.
கோவையில் இன்று (டிச.13) லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும், மலை ரயில் சேவை, நாளை மற்றும் நாளை மறுதினம் (டிச.13,14) உள்ளிட்ட இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில், பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்தில், போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய, ஜான் பால் (34), விஜயலட்சுமி (54) அஸ்மா( 22), வேம்பு (32) செல்வி (30) அபிதா(24 )ஆகிய ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். “தமிழக அரசின் இணையதளத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறை என்று குறிப்பிடாமல், சமய அறநிலையத்துறை என்று குறிப்பிடும் அளவுக்கு, இந்து மதத்தின் மீது தீராத வன்மம் கொண்டதாக, திமுக அரசு உள்ளது. திமுக அரசு உடனடியாக தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று, இன்று சென்றுகொண்டிருந்தது. கார், கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே வந்த, சரக்கு வாகனம் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜேகப் ஆபிரகாம் (60), ஷீபா (55), பேரக்குழந்தை ஆரோன் ஜேகப் (2 மாதம்) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (டிசம்பர்.12) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
கோவை, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் ஊராட்சி உட்கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதினை ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி பெற்று கொண்டார். தேசிய அளவில் விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அம்மன் சயன கோலத்தில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தா்கள் நம்புகின்றனா். இக்கோயில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9 மணிக்கு மேல் நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.