India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கணவன்-மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கத்தில் வசித்த மாயாணடி,வள்ளிநாயகி தம்பதியை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நகை, பணத்துகாக அவர் வீட்டில் டைல்ஸ் வேலை செய்த பீகாரைச் சேர்ந்த கம்ரூல் ஆலம் கொலை செய்து கைதனார். ஜாமீனில் வந்த அவர் டெல்லியில் மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இன்று (பிப்.03) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அண்ணா நகர் 11வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராம்குமார். இவரை தொடர்புகொண்டு வாட்ஸ் அப் மூலம் பேசிய ஒருவர் தான் முன்னாள் பெண் தோழி ரோகிணி என கூறி கூகுள் பே மூலம் 25000 ரூபாய் அனுப்ப கூறியுள்ளார். அதனை நம்பிய ராம் குமார் பணத்தை அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் பெண் குரலில் பேசிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (பிப்.3) காலை முதலே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் பெயரில், இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை முடிவில், விவரங்கள் தெரிவிக்கப்படும்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பொறியாளர்கள், அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். <
2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – போரூர் இடையே உயர்மட்டப் பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும். அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று (பிப்.3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெல்ஸ் சாலை – திருவல்லிக்கேணி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலைக்கு செல்ல அனுமதி இல்லை. போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்படும். கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
சென்னையில் நாளை (பிப்.4) பல இடங்களில் மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, புழல், சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ், காவாங்கரை, கதிர்வேடு, புத்தகரம், போரூர், காட்டுபாக்கம், செம்பியம், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ஜிஎன்டி சாலை, பிபி சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், பல்லவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.