India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படுகிறது. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
ராயபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான தணிகைவேல் (44) என்பவர் கடந்த சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அரசு பேருந்தில் மாணவி சென்றபோது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். புகாரின் பேரில் தணிகைவேல் நேற்று (பிப்.11) ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை புதிய சிஎம் ஆரல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பார்க்கிங் உள்ளதா? என்பதை இந்த செயலியில் பார்க்கலாம். அதாவது, மெட்ரோ செயலியை ஓபன் செய்து மேலே இடதுபுறம் உள்ள மெனுவை கிளிக் செய்தால், அதில் 4ஆவது இடத்தில் பார்க்கிங் அவைலபிலிட்டி என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால், அனைத்து ஸ்டேஷன்களின் பெயர்களும் வரும். அதில், வாகனங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை அறியலாம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <
சென்னையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் முட்டையின் சில்லறை விற்பனை விலையானது ரூ.5.00க்கு விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள பண்ணையில் கொள்முதல் செய்யப்படும் முட்டையின் விலையானது ரூ.4.65க்கு கொள்முதல் செய்யப்படுவதால், முட்டையின் விலை ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று (பிப்.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால், தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், எல்டாம்ஸ் சாலை, காமராஜர் சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், பெரியார் சாலை, அண்ணா சாலை, அண்ணா நாகர், திருமுல்லைவாயல், தாமரைபாக்கம், கிழக்கு முகப்பேர், அரும்பாக்கம், MMDA காலனி, சூளைமேடு, 100 அடி சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னையில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க
சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பொய் பேசுகிறார். பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பீகார் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை தருகிறார். பீகார் உயர் நீதிமன்றம் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
சென்னை அசோக் பில்லர் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது உதயம் தியேட்டர் தான். இது, 1983ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. ரஜினிகாந்தின் சிவப்பு சூரியன் முதல் கமல்ஹாசனின் சாட்டை என பல படங்கள் 40 வருடமாக திரையிடப்பட்டன. உதயம் தியேட்டர்கு ஒரு பாட்டு உண்டு, ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’ இந்தப் பாடல் யாராலும் மறக்க முடியாது. இன்னும் 2 வாரத்தில் தியேட்டர் இடிக்கும் பணி நிறைவடையும்.
நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 2ஆவது தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (60). இவரது மனைவி லட்சுமி (55). மருமகன் குணா (45). கேஸ் சிலிண்டரில் ரெகுலேட்டர் சரியாக பொருத்தாததால், கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 3 பேரும் படுகாயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 3 பேரும் இறந்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.