Chennai

News February 14, 2025

ரத்னா ஃபேன் ஹவுஸ் தலைவர் காலமானார்

image

பிரபல தொழிலதிபரும் ‘ரத்னா ஃபேன் ஹவுஸ்’ நிறுவனத்தின் தலைவருமான அருள் பிரகாச தாசா சுவாமிகள் என்ற கிருஷ்ணமூர்த்தி (81), நேற்று (பிப்.13) காலமானார். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று (பிப்.14) நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 14, 2025

பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் கைது

image

பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்ட அபு சலாம் அலி என்ற நபரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். வெகு நாட்களாக தலைமறைவாகி இருந்த அவரை அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போலீசாருடன் இணைந்த அசாம் போலீசார், செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

News February 14, 2025

பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழப்பு

image

அரும்பாக்கத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் (18) இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு ஜெய் நகர் அருகே சென்றபோது, முன்னால் வாகனம் வருவதைகண்டு பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக சரண்ராஜ் என்பவரை கைது செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2025

CM ரூட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

image

வளசரவாக்கத்திற்கு CM செல்லும் ரூட்டில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் வெடிகுண்டு வைப்போம் எனக் கூறிய தென்காசியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பவரை செல்போன் நம்பரை வைத்து காவல்துறை கைது செய்துள்ளனர். தென்காசியில் போலீசார் கைது செய்துள்ள நிலையில், முத்துச்செல்வனை அழைத்து வர சென்னை போலீசார் தற்போது தென்காசி விரைந்துள்ளனர்.

News February 13, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்

image

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று (பிப்.13) ஆஜரானார். தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா சாட்சியம் அளிப்பதற்காக ஆஜரானார். 109 பட பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட தடைக் கோரி பாடல்களின் உரிமை பெற்ற மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

News February 13, 2025

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், 2ஆவது கணவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து 2ஆவது திருமணம் செய்து கொண்டதாகவும், 2ஆவது கணவர் தனது மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து மிரட்டுவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் 2ஆவது கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News February 13, 2025

காதலர் தினம்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

image

காதலர் தினத்தையொட்டி, பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெரினா கடற்கரை, எல்லியட்ஸ் கடற்கரை, உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு மாறுவேடத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் எல்லை மீறும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

News February 13, 2025

பாலியல் புகார்: இணை ஆணையர் சஸ்பெண்ட்

image

சென்னை வடக்கு மண்டல போலீஸ் ஆணையர் மகேஷ் குமார் (IPS) மீது 2 பெண் காவலர்கள் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, டி.ஜி.பி. உத்தரவின்பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

News February 13, 2025

“CM ரூட்டில் பாம் வைப்போம்” வெடிகுண்டு மிரட்டல்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது இல்லத்திலிருந்து நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் வழியாக வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். இந்நிலையில், CM செல்லும் ரூட்டில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர் காவல் கட்டுப்பட்டறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2025

25 புறநகர் ரயில்கள் ரத்து

image

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், இன்று (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!