India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் MLA கே.பி.சங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ரஷி (20), அவரது நண்பர் தேவா (21), ஆதித்யா (20) ஆகியோர் நேற்று முன்தினம் (பிப்.14) பாழடைந்த வீட்டில் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், முன்விரோதம் காரணமாக சத்யா என்பவர் தனது கூட்டாளிகளுடன் கொலை செய்தது தெரியவந்தது. 3 தனிப்படையினர் சென்னை அருகே பதுங்கியிருந்த சத்யா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று (15.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பிரதான சாலையில், சுகந்த பவன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு வந்த ரவுடி கும்பல், உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட உணவுக்கு ஓட்டல் ஊழியர்கள் பணம் கேட்டதால், அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தியால் ஹோட்டல் உரிமையாளர் மனோ அஜயை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அமைச்சர் மா.சு., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “3 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு மற்றும் நாய் கடிகளுக்கு, வட்டார சுகாதார மருத்துவமனைகளில் மட்டும் மருந்து இருப்பு இருந்தது. ஆனால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் மருத்துவமனைகளிலும் நாய், பாம்பு கடி மருந்துகள் உள்ளன” என்றார்.
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
நேரு விளையாட்டரங்கில் இன்று (பிப்.15) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டியில், சென்னையின் எஃப்சி – பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி 24 புள்ளிகளுடன் பட்டியலில் 9ஆவது இடத்திலும், சென்னை அணி 21 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளது. சென்னை அணி சொந்த மண்ணில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
புழல் பகுதியில் குடும்ப நண்பர் போல் பழகி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உலகநாதன் (63) என்பவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றச்செயலில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதிலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி வெளியே சொன்னால் உன் தாயைக் கொலை செய்துவிடுவேன் என அந்த சிறுமியை உலகநாதன் மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடபழனி முருகனை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி காணிக்கை செலுத்தினால் சகல தொல்லைகளும் விலகும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்களும் இங்கே வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.